வீட்டு கடன், வாகன கடன் வாங்கியவர்களுக்கு சோதனை காலம்..!! ரிசர்வ் வங்கி என்ன முடிவெடுக்க போகுதோ..!!

இந்தியாவில் வீட்டு கடன், வாகன கடன் வாங்கியவர்களுக்கு சோதனை காலம் இது. அண்மையில் தான் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. இதனால் நம் வீட்டு கடன், வாகன கடன், தங்க நகை கடன் உள்ளிட்டவற்றின் வட்டி விகிதங்கள் உயர்வு கண்டன.

நம் நாட்டின் பணவீக்கம் மற்றும் பொருளாதார நிலவரங்களை கருத்தில் கொண்டு தான் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகித முடிவினையே எடுக்கிறது. வரும் காலங்களில் பணவீக்கம் உயரும் அபாயம் இருப்பதால் ரிசர்வ் வங்கி மேலும் இரண்டு அல்லது மூன்று முறை வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கான சாத்திய கூறுகள் இருப்பது அண்மையில் நடந்த நிதி கொள்கை குழு கூட்ட அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.

வீட்டு கடன், வாகன கடன் வாங்கியவர்களுக்கு சோதனை காலம்..!! ரிசர்வ் வங்கி என்ன முடிவெடுக்க போகுதோ..!!

விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்க அழுத்தங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதங்களை மேலும் உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். இரண்டு முறை வட்டி உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய சூழல் மூன்றாவது முறையும் வட்டி உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது ரெப்போ வட்டி விகிதம் 5.50%என இருக்கும் நிலையில் அது 6.25%க்கும் மேல் உயரும் என கணிக்கின்றனர்.

உணவு பொருட்கள் மற்றும் எரிபொருள் விலைகளில் ஏற்படும் விலை மாற்றம் நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கத்தை பெரிதும் பாதிக்கக்கூடும் என ஆர்பிஐ நிதி கொள்கை குழு உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர். உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவையும் இதற்கு முக்கிய காரணமாகும்.

Also Read

விலையேற்றம் தொடர்ந்து உச்சத்தில் இருந்தால், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்துவதைத் தவிர மத்திய வங்கிக்கு வேறு வழியில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. அடுத்ததாக டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் நிதி கொள்கை கூட்டம் நடைபெற உள்ளது.எனவே நிதி கொள்கை குழு கூட்டம் வரை காத்திருக்காமல் இடைபட்ட காலத்திலேயே ரிசர்வ் வங்கி வட்டி விகித உயர்வு அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாம்.

Recommended For You

எனவே வீட்டு கடன், வாகன கடன், தங்க நகை கடன் போன்ற கடன்களை வாங்கியவர்களூக்கு அடுத்தடுத்த மாதங்களில் வட்டி உயர்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் நம் மாதாந்திர ஈஎம்ஐ தொகை உயர்ந்து மாதாந்திர பட்ஜெட்டிலேயே கை வைக்கும்.

ஆர்பிஐ எம்பிசி கூட்டறிக்கைகளின்படி, பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர ரிசர்வ் வங்கி கடுமையான நிதி கொள்கைகளை அறிவிக்க தயாராக இருப்பதாகவே தெரிகிறது. எனவே கடன் வாங்கியவர்கள் இனி செலவுகளை கட்டுப்படுத்தி ஈஎம்ஐ-க்கு அதிக தொகையை ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+