டெல்லி: கடந்த மாத இறுதியில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) UK-வில் இருந்து இந்தியாவுக்கு தங்கத்தை மாற்றியது. அதன்படி கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல் முறையாக, பிரிட்டனில் இருந்து 100 டன் தங்கத்தை RBI இந்தியாவுக்குக் கொண்டுவந்தது. இந்நிலையில் பலருக்கும் ஏன் திடீரென்று இவ்வளவு அதிகமான தங்கத்தை RBI மாற்றி உள்ளது என்ற குழப்பம் இருந்து வந்தது. அதற்கு பதில் அளிக்கும் வகையில், தங்கத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு பின்னால் இருக்கும் காரணத்தை ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் விளக்கியுள்ளார்.
அவரது கூற்றுப்படி, ரிசர்வ் வங்கியின் தங்கம் வாங்கும் நடவடிக்கையின் காரணமாக, வெளிநாட்டில் இருந்த தங்கத்தின் அளவு அதிகரித்ததே இதற்குக் காரணமமாம். மேலும், சமீபத்திய தரவுகளின் படி, ரிசர்வ் வங்கி தனது தங்க இருப்பை அதிகரித்து வருகிறது. இதனால் தங்கத்தின் அளவும் அதிகரித்து வருகிறது. மேலும் தங்கத்தை சேமிக்க இடம் இருந்த காரணத்தினால், இந்தியாவுக்கு வெளியே இருந்த தங்கக் கையிருப்பின் ஒரு பகுதியை, இந்தியாவுக்குள் கொண்டு வந்து சேமித்து வைக்க முடிவு செய்யப்பட்டது. இதுவே இந்த மாற்றத்திற்கான காரணம், இதில் வேறு எதையும் யூகிக்க வேண்டாம் என்றும் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

இந்த பரிமாற்றத்தின் மூலம் பேங்க் ஆப் இங்கிலாந்து வங்கிக்கு, RBI செலுத்தும் கட்டண செலவை சேமிக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.
இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு RBI கொண்டு வந்த 100 டன் தங்க பரிமாற்றத்திற்குப் பிறகு, இங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ள மொத்த தங்கத்தின் அளவு 408 மெட்ரிக் டன்களாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் RBI வெளியிட்ட ஆண்டறிக்கையின்படி, இந்தியாவில் வெளியிடப்பட்ட நோட்டுகளுக்கு ஆதரவாக 308 மெட்ரிக் டன் தங்கம் உள்ளது. மேலும் 100.28 டன்கள் வங்கித் துறையின் சொத்தாக சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் ஏன் வெளிநாட்டு கஜானாக்களில் சேமிக்கப்படுகிறது தெரியுமா?: வெளிநாட்டு கஜானாக்களில் சேமிக்கப்படுவதை பார்ப்பதற்கு முன்பு, எதற்காக மத்திய வங்கிகள் தங்கத்தை சேமிக்கின்றன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள், புவிசார் பதற்றங்கள், போர் போன்ற நிலைகளின் போதும் தங்கம் பாதுகாப்பான முதலீடாக இருக்கும். தங்கத்தை உடனடியாக பணமாக மாற்றிக் கொள்ளலாம். அரசாங்க நிதிகளை திறம்பட நிர்வகிப்பதற்கு தங்கத்தில்தான் முதலீடு செய்கின்றனர்.
சரி அடுத்ததாக ஏன் வெளிநாட்டு கஜானாக்களில் தங்கம் சேமிக்கப்படுகிறது என்றால் முன்பு சொன்னது போல் புவிசார் பதட்டங்கள், போர், பொருளாதார நிச்சயமற்றத்தன்மை, இயற்கை பேரிடர் போன்ற காரணங்களினால் இந்தியாவில் உள்ள தங்கம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக வெளிநாட்டு கஜானாக்களில் சேமிக்கப்படுகிறது. அதேபோல வெளிநாட்டு வர்த்தகத்தை எளிதாக்குவதற்காகவும் பயன்படுகிறது. வெளிநாட்டு கஜானாக்கள் பொதுவாக அதீத பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன. இதுவும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications