இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது நாணயக் கொள்கைக் குழு (MPC) கூட்டத்தில், யாரும் எதிர்பாராத விதமாக ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6.25% ஆக நிர்ணயித்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு வரியைக் குறைத்துள்ளது மூலம் மக்கள் வாங்கிய கடனில் அதிகளவிலான சேமிக்க முடியும் என கூறப்படும் வேளையில் புதிய பிரச்சனை வெடித்துள்ளது.
சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டார்னு சொல்ற கதையாக ஆர்பிஐ வட்டியை குறைத்த நிலையில், வங்கிகள் கடனுக்கான வட்டியைக் குறைக்காமல் இழுத்து அடிக்கிறது. இது மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்திற்கு வேட்டு வைப்பது போல் உள்ளது. உண்மையில் ஏன் வங்கிகள் வட்டியை குறைக்க மறுக்கிறது.

ஆர்பிஐ ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டதால், தனிநபர்கள் வீடு, கார் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக கடன் பெறுவது மலிவாக வாய்ப்புள்ளது. ஆனால் இந்த வட்டி விகித குறைப்பை வங்கிகள் மக்களுக்குக் கொடுக்க வேண்டும், ஆனால் இதை செய்ய மறுக்கிறது.
ரெப்போ விகிதம் என்பது ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்குக் கடன் வழங்கும் ஒரு முக்கிய வட்டி விகிதமாகும். ரிசர்வ் வங்கி இந்த ரெப்போ விகிதத்தைக் குறைக்கும்போது, வங்கிகளுக்கு கடன் வாங்கும் செலவுகள் குறையும். இதன் மூலம் வங்கிகள் மக்களுக்கு குறைவான வட்டி விகிதங்கள் உடன் கடன்களை வழங்கும்.
வங்கிகள் ரெப்போ விகிதக் குறைப்பின் பலன்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எந்த அளவிற்குக் கடத்துகின்றன என்பதைப் பொறுத்தது தான் நாட்டின் பொருளாதாரமும், மோடி 3.0 அரசின் வெற்றியும் நடக்கும்.
வரலாற்று ரீதியாகவே, ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதக் குறைப்புகளை வங்கிகள் உடனடியாகவும் முழுமையாகவும் வாடிக்கையாளர்களுக்குக் கடத்துவது கிடையாது. சில சமயங்களில் எவ்விதமான குறைப்பையும் செய்வது கிடையாது. இதேபோலத் தான் தற்போது நடக்கிறது, ரெப்போ விகித குறைப்பிற்குப் பின்பு ஹெச்டிஎப்சி வட்டி விகிதத்தை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த வட்டி குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதில் ஏற்படும் தாமதத்திற்குப் பல காரணிகள் முக்கியமான காரணங்களாக உள்ளன. தற்போது, வங்கிகள் பணப்புழக்கப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன. அதாவது, அவர்களிடம் உடனடியாக கிடைக்கக்கூடிய பணம் குறைவாக உள்ளது. இதனால் வங்கிகளின் கடன் வர்த்தகத்திற்கான நிதி பற்றாக்குறை சற்று அதிகமாக உள்ளது. அதை சமாளிக்க ரெப்போ விகித குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு அளிக்காமல் தொடர்ந்து அதிகப்படியான லாபத்தைப் பெறுவது மூலம் நிதி ஆதாரத்தைப் பெறும்.
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தைச் சரி செய்ய, ஆர்பிஐ பல நடவடிக்கைகளை எடுக்கப்பட்டது, அதில் முக்கியமான அறிவிப்பு ரெப்போ விகிதத்தைக் குறைப்பது தான். ஆனால் கடந்த 5 வருடத்தில் வட்டியை பல முறை உயர்த்தினாலும், நீண்ட காலத்திற்குப் பின்பு கடந்த வாரம் தான் குறைந்தது.
நாட்டின் பொருளாதாரம் மந்தமடைந்து வரும் வேளையிலும், பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதையும், நகர்ப்புற நுகர்வு குறைந்துள்ளதையும் கருத்தில் கொண்டு ஆர்பிஐ தனது வட்டி விகிதத்தை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெரிய அளவிலான வரிக்குறைப்புகளுடன் கூடுதல் நிவாரணமாகப் பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications