இந்திய ரிசர்வ் வங்கி (RBI), ஜூன் 6, 2025 அன்று, ரெப்போ விகிதத்தை 50 புள்ளிகள் (basis points) குறைத்தது. இதன் பிறகு, ரெப்போ விகிதம் 6%இல் இருந்து 5.5% ஆக குறைந்துள்ளது. இது குறைந்த EMI-களில் கடன் வாங்குபவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மத்திய வங்கியின் விகிதக் குறைப்புகள் அனைத்து கடன் வகைகளுக்கும் உடனடி நிவாரணமாக மாறாது. உண்மையான வட்டி விகித மாற்றம் என்பது அது விரைவாகவோ, மெதுவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம்.இது பல காரணிகளை கொண்டுள்ளது.
இதில், "நீங்கள் எடுத்த கடனின் வகை, எப்போது அந்த கடனை எடுத்தீர்கள், உங்கள் கடன் வழங்கும் நிறுவனம் (வங்கி/நிதி நிறுவனம்), உங்கள் கடன் எந்த தரவுகளை அடிப்படையாக வைத்துள்ளது" என்பதை பொறுத்து தான், ரிசர்வ் வங்கியின் விகித குறைப்பு உங்கள் கடனில் எப்போது..? எவ்வளவு..? பயன் தரும் என்பது தீர்மானிக்கப்படும்.

சில கடன் வகைகள், குறிப்பாக தனிப்பட்ட கடன்கள் (Personal Loans), கிரெடிட் கார்டு நிலுவைகள் (Credit Card Debt) இவை பெரும்பாலும் நிலையான வட்டி விகிதத்தில் (Fixed Interest Rate) வழங்கப்படுகின்றன. இதன் காரணமாக, ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தாலும், உங்கள் கடனில் எந்த மாற்றமும் ஏற்படாது. உங்கள் கடனை எடுத்த காலத்தில் தீர்மானிக்கப்பட்ட வட்டி விகிதமே, முழு காலப் பதிவிலும் தொடரும். ரிசர்வ் வங்கியின் விகித மாற்றத்தின் நேரடி பலனை நீங்கள் பெற வேண்டும் என்றால், உங்கள் கடன் ஒரு மாறும் வட்டி விகிதத்திற்கு (floating rate) இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால், அதன் தாக்கம் உங்கள் மீதாது வரக்கூடிய சாத்தியம் குறைவாகவே இருக்கும்.
ரெப்போ விகிதம் கடன் வழங்குபவர்களையும் கடன் வாங்குபவர்களையும் பாதிக்கிறதா..?:இதுகுறித்து BankBazaar நிறுவனத்தின் CEO ஷெட்டி கூறுகையில், "அதிகமான கடன் வழங்குநர்கள், குறிப்பாக தனிப்பட்ட கடன்கள் போன்றவை, நிலையான வட்டி விகிதத்தில் (Fixed Rate Loans) வழங்குகிறார்கள். ஆனால் கார் கடன், பத்திரங்களைக் கடனாக வைத்து பெறப்படும் கடன் போன்றவை சில சமயங்களில் நிலையானதும், சில சமயங்களில் மாறும் விகிதத்துடனும் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
கார் கடன்கள் அல்லது பத்திரங்களுக்கு எதிரான கடன்களைப் பொறுத்தவரை, வட்டி விகிதம் நிலையானதாகவோ அல்லது மாறும் வட்டி விகிதத்துடன். மாறும் வட்டி விகிதம் என்றால், இவை வங்கிகளால் நிர்ணயிக்கப்பட்ட உள் அல்லது வெளிப்புற அளவுகோல்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. 1 அக்டோபர் 2019 முதல், அனைத்து புதிய மாறும் வட்டி விகிதக் கடன்களும் வெளிப்புற அளவுகோல்களுடன் இணைக்கப்பட வேண்டும். இருப்பினும், பழைய கடன்கள் பெரும்பாலும் உள் அளவுகோல்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கை (2024-25)-ன் படி, மாறும் விகிதத்தில் உள்ள கடன்களில் 35.9% இன்னும் MCLR-ஐ (உள் தரவுகளை) அடிப்படையாக வைத்துள்ளன.
தீமைகள் மற்றும் வாய்ப்புகள் : மாறும் விகிதக் கடன் வைத்திருப்பவர்கள், ரெப்போ வட்டி விகிதம் குறையும் போது நன்மை பெறுவர். ஆனால், வட்டி விகிதம் உயர்ந்தால், அதிக வட்டி செலுத்த வேண்டி வரும். நிலையான விகிதக் கடன்களில் மாற்றம் இல்லாததால், ரிசர்வ் வங்கியின் மாற்றங்கள் எல்லா நேரமும் உடனடி தாக்கம் ஏற்படுத்தாது. ரெப்போ விகித மாற்றத்தின் தாக்கம் உங்களுக்கேற்ப ஏற்படுமா..? என்பதை தீர்மானிப்பது, உங்கள் கடன் மாறும் விகிதமா, நிலையானதா, எந்த தரவுகளை பின்பற்றுகிறது என்பதையே சார்ந்திருக்கும்.
வங்கி சாரா நிதி நிறுவனங்களில் தாக்கம் : ரிசர்வ் வங்கி விகிதத்தை குறைத்தாலும், அதன் நேரடி பயனை NBFC (Non-Banking Financial Companies) கடனாளிகள் அனைத்தும் பெறுவார்கள் என்று கருத முடியாது. NBFC-க்கள் (வங்கி சாரா நிதி நிறுவனம்) தங்களின் விகித மறுஅமைப்பை தாங்களாக நிர்ணயிக்கலாம். ஒரு NBFC, எப்போதெல்லாம் வட்டி விகிதத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை தானே தீர்மானிக்கிறது. எனவே, ஏற்கனவே கடன் எடுத்தவர்கள், RBI விகித மாற்றத்தால் உடனடியாக நன்மை பெற வாய்ப்பில்லை. அல்லது அந்த தாக்கம் மிகக் குறைவாக இருக்கலாம்.
இதுதொடர்பாக SahajMoney நிறுவனர் அபிஷேக் குமார் கூறுகையில், "சிறந்த கிரெடிட் ரேட்டிங் கொண்ட NBFCக்கள், நிதியை குறைந்த செலவில் பெற்றுக்கொள்ளும் திறன் வாயிலாக,
RBI விகிதக் குறைப்பின் பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்க நன்கு சாதகமாக இருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார். அதாவது, வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வங்கிகளைவிட வட்டி விகித மாற்றங்களை ஏற்படுத்தும் கட்டுப்பாடுகளில் சுதந்திரம் பெற்றுள்ளன. எனவே, ரெப்போ வட்டி விகிதம் குறையும்போது, அதன் பயனை பெறுகிறீர்களா என்பதை உங்கள் NBFC-யின் கொள்கை மற்றும் பணி முறைகள் தீர்மானிக்கும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications