ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு (MPC) வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6.25% ஆக நிர்ணயித்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு முதன்முறையாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதக் குறைப்பு பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல் எஸ்டேட்: முக்கியமாக, இந்த வட்டி விகிதக் குறைப்பு வீட்டுக்கடன் வாங்கியோருக்கு நிம்மதியை ஏற்படுத்தும். ரெப்போ விகிதம் குறைவதால், வங்கிகள் தங்களது கடனுக்கான வட்டி விகிதத்தையும் குறைக்க வாய்ப்புள்ளது. இதன் வாயிலாக, ப்ளோட்டிங் வட்டி விகிதம் கொண்ட வீட்டுக்கடன்களுக்கான மாத தவணை (EMI) குறையும்.

புதிய வீடு கனவு: இதனால், ஏற்கனவே வீட்டுகடன் பெற்றவர்களுக்கு நிம்மதி ஏற்படுவதோடு, புதிய வீட்டுக்கடன் வாங்க விரும்புவோருக்கும் ஈஎம்ஐ சுமை குறைந்து அதிகப்படியான மக்களைச் சொந்த வீடு வாங்க ஊக்கம் அளிக்கும். குறைந்த வட்டி விகிதம் வீட்டு விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வட்டி விகிதக் குறைப்பு வீட்டு விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதல் நிதி ஆதாரம்: இந்த ரெப்போ விகிதம் வீட்டுக்கடன் மட்டும் அல்லாமல் கார் லோன், பைக் லோன், பர்சனல் லோன், தங்க கடன் என அனைத்து கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கும். இந்த வட்டி விகிதம் புதிய கடன்களுக்கு நேரயாக மாற்றப்படும், இதேவேளையில் ப்ளோட்டிங் வட்டி விகிதம் கொண்ட அனைத்து கடன்களுக்கும் இது பொருந்தும் என்பதால் மக்கள் கையில் கூடுதல் நிதி ஆதாரம் கிடைக்கும். எப்படி..?
நுகர்வை அதிகரிக்கும்: குறைந்த வட்டி விகிதம், கடன் வாங்கியோர் மாதத் தவணையைக் குறைக்க உதவுவதால், அவர்களிடம் அதிகமான அளவு நிதி கையில் இருக்கும். இதன் விளைவாக, அவர்கள் பிற பொருட்கள் மற்றும் சேவைகளை அதிகமாக வாங்க முடியும். இது மற்ற தொழில்களின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். இப்படி நாட்டின் ஒட்டுமொத்த நுகர்வையும் அதிகரிக்கும்.
வங்கிகளின் முடிவு: இருப்பினும், வங்கிகள் தங்களது கடன் வழங்கும் விகிதத்தை எந்த அளவுக்குக் குறைக்கும் என்பதைப் பொறுத்து இந்த வட்டி விகிதக் குறைப்பின் தாக்கம் அமையும். வங்கிகள் விரைவாகவும், அதிக அளவிலும் தங்களது கடன் வழங்கும் விகிதத்தைக் குறைத்தால், பொருளாதாரத்தில் அதிக நன்மைகள் கிடைக்கும்.
இந்த வட்டி விகிதக் குறைப்பு, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் ரிசர்வ் வங்கியின் முயற்சியைக் காட்டுகிறது, பட்ஜெட் அறிவிப்புகளைத் தொடர்ந்து ஆர்பிஐ அறிவிப்பும் வந்துள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தியும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தும் சமநிலையைக் கொண்டு வருவது தான் மத்திய வங்கியின் முக்கிய பணியாகும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications