இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. இதனை அடுத்து பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது , வீட்டு கடன்களுடன் தொடர்புடைய ரெப்போ இணைப்புக் கடன் விகிதம் (RLLR)ஐ குறைப்பதாக அறிவித்துள்ளது. இது வீட்டு கடன் வாங்கியவர்களுக்கான மாதாந்திர தவணைகளை (EMIs) குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்ததை அடுத்து பஞ்சாப் நேஷனல் வங்கி இதனை அறிவித்தது. இந்த வங்கி தனது RLLR விகிதத்தை 06.12.2025 முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக கூறுகிறது. 10 அடிப்படைப் புள்ளிகள் BSP உட்பட, RLLRஐ 8.35% இல் இருந்து 8.10% ஆக குறைத்துள்ளது.

05.12.2025 அன்று ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து எங்களின் RLLR விகிதத்தை 8.35% இல் இருந்து 8.10% ஆக 06.12.2025 முதல் திருத்தி அமைத்துள்ளோம் என தெரிவித்துள்ளது. ஆனால் வங்கியின் MCLR மற்றும் அடிப்படை விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை.
டிசம்பர் 5, வெள்ளிக்கிழமை நடைபெற்ற பணவியல் கொள்கைக் (MPC) கூட்டத்தில் ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து, அதை 5.25% ஆக நிர்ணயித்தது. ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான ஆறு உறுப்பினர்கள் கொண்ட குழு ஒருமனதாக வாக்களித்து, எதிர்காலத்தில் மேலும் குறைப்புகளுக்கு இடமளிக்கும் நடுநிலையான நிலைப்பாட்டை தக்கவைத்தது. ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்கள் தவிர, பிப்ரவரி 2025 முதல் இது மத்திய வங்கியின் நான்காவது விகிதக் குறைப்பு ஆகும்.
PNB-யின் RLLR குறைப்பால், ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட வீட்டுக் கடன்களின் வட்டி விகிதங்கள் குறைந்து, வாடிக்கையாளர்களுக்கு இஎம்ஐ குறையும். RLLR-க்கான மறுசீரமைப்பு காலம் பொதுவாக மூன்று மாதங்கள் என்பதால், அக்டோபரில் இஎம்ஐ தொடங்கியவர்களுக்கு, விகிதக் குறைப்பு ஜனவரியில் அமலாகும். பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி உட்பட பிற வங்கிகளும் இதேபோன்ற குறைப்புகளை அறிவித்தன. இந்தியன் வங்கி தனது விகிதத்தை 8.20% இல் இருந்து 7.95% ஆக, 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்தது.
அக்டோபர் 2019 RBI சுற்றறிக்கையின்படி, வங்கிகள் சில்லறை கடன்களை வெளி பெஞ்ச்மார்க் கடன் விகிதங்களுடன் (E-BLR) இணைக்க வேண்டும். எனவே, பெரும்பாலான வங்கிகள் ரெப்போ விகிதத்தையே தங்கள் பெஞ்ச்மார்க்காக ஏற்றுக்கொண்டன. RLLR இணைந்த வீட்டுக் கடன் பெறுவோர் இனி குறைவான இஎம்ஐ செலுத்துவார்கள்.
More From GoodReturns

Gold loan: ஆர்பிஐ கொண்டு வந்துள்ள ”7 நாட்கள்” விதி!! தங்க நகை கடன் வாங்குவோருக்கு மேஜர் அப்டேட்!!

வீட்டு கடன், வாகன கடன் வட்டி குறையுமா? மும்பையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தீவிர ஆலோசனை..!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications