இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நாணய கொள்கை குழு-வின் (MPC) கூட்டம் முடிந்து அக்டோபர் 9, 2024 அன்று ரெப்போ விகிதம் குறித்த தனது முடிவை அறிவிக்க உள்ளது. அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் -இன் சமீபத்திய 50 அடிப்படை புள்ளிகள் வட்டி குறைப்புக்குப் பிறகு, நடக்கும் கூட்டம் என்பதால் மக்கள் மத்தியில் வட்டி குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஆனால் சந்தை நிலவரம் எப்படி இருக்கு..? ஆர்பிஐ வட்டியை குறைக்குமா..?
RBI நாணய கொள்கை குழு 2023 ஏப்ரல் முதல் தனது ரெப்போ விகிதத்தை 6.50 சதவீதமாகத் தொடர்ந்து வைத்திருக்கிறது. இதனாலேயே அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் -இன் வட்டி குறைப்பிற்கு பின்பாவது வட்டியை குறைக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

மேலும் ரிசர்வ் வங்கியின் வட்டி நிர்ணயம் செய்யும் நாணய கொள்கை குழு-வில் மூன்று புதிய வெளிப்புற உறுப்பினர்கள் கடந்த வாரம் சேர்க்கப்பட்ட நிலையில், இந்த கூட்டத்தில் ஆர்பிஐ முடிவுகள் எப்படியிருக்கும் என்பதில் கூடுதல் கவனம் பெறுகிறது.
இந்தியாவின் நுகர்வோர் பணவீக்கம் ஆகஸ்ட் 2024ல் 3.65 சதவீதமாக இருந்தது, இது ஜூலை மாதத்தில் 3.54 சதவீதத்திலிருந்து குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் மாதத்தில் உணவு பணவீக்கம் 5.66 சதவீதமாக இருந்தது, மேலும் செப்டம்பரில் இது சற்று உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் ஒட்டுமொத்த பணவீக்கம் 2024-25 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 4.4 சதவீதத்திற்குக் கீழ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாதகமான பருவமழை மூலம் நிரப்பப்பட்ட நீர்த்தேக்கங்கள், ஆரோக்கியமான விவசாய உற்பத்தி மற்றும் குறைந்த உலகளாவிய உணவு விலைகள் ஆகியவற்றால் உணவு பணவீக்கம் வரும் மாதங்களில் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இதேபோல் நாட்டின் பணப்புழக்கத்தைப் பார்க்கும் போது, இந்திய ரிசர்வ் வங்கி சமநிலையான அணுகுமுறையைக் கொண்டு உள்ளது. உலகளாவிய சந்தையில் இந்திய அரசு பத்திரங்களைச் சேர்க்கப்பட்டது மூலம், இந்தியாவின் கடன் சந்தைக்குக் குறிப்பிடத்தக்க வெளிநாட்டு முதலீடுகள் வர வழிவகுத்தது.
ஜூலை-ஆகஸ்ட் காலகட்டத்தில் கடன் பத்திரங்கள் வாயிலாக வெளிநாட்டில் இருந்து சுமார் 4.8 பில்லியன் டாலர்கள் முதலீட்டு அளவீட்டை எட்டியது.
மேலும் 2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் ரியல் ஜிடிபி வளர்ச்சி விகிதம் முந்தைய ஆண்டின் 8.2 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 6.7 சதவீதத்திற்குக் குறைந்தது. இருப்பினும், உண்மையான GVA வளர்ச்சி 6.8 சதவீதத்தில் வலுவாக இருந்தது.
இந்த அனைத்து முக்கியமான காரணிகளையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, இந்த நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை உயர்த்த வாய்ப்பில்லை. 2024 டிசம்பரில் தொடங்கக்கூடிய கூட்டத்தில் தான் வட்டி குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications