வீட்டுக் கடன் வாங்கியுள்ளீர்களா.. ரெடியா இருங்க, பர்ஸ் ஓட்டை ஆகப் போகுது..!

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) டிசம்பர் 7, 2022 அன்று தனது இருமாத நாணயக் கொள்கை கூட்டத்தின் முடிவுகளை வெளியிட உள்ளது.

இக்கூட்டத்தில் ரிசர்வ் வக்கி தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.35 சதவீதம் வரையில் உயர்த்தும் எனக் கணிக்கப்படுகிறது. இதன் மூலம் 5.9 சதவீதமாக இருக்கும் ரெப்போ விகிதம் 6.25 சதவீதமாக உயர உள்ளதால் புதிதாக வீட்டுக் கடன் வாங்குபவர்களும், ஏற்கனவே வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கும் சோகத்தில் உள்ளனர்.

தற்போது வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு இந்த ரெப்போ விகித உயர்வால் EMI தொகை உடனடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி இந்த மாதம் ரெப்போ விகிதத்தை உயர்த்தினால், குறிப்பாக external benchmark lending rate உடன் இணைக்கப்பட்ட மிதக்கும் வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்கள் உள்ளவர்களுக்குக் கட்டாயம் உயர உள்ளது.

பணவீக்கம்

பணவீக்கம்

இந்தியாவில் அதிகரித்து வந்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தைச் சுமார் 1.9 சதவீதம் அதிகரித்துப் பல வருட சரிவில் இருந்த 4 சதவீத ரெப்போ விகிதத்தை 5.9 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

இந்த நிலையில் பெரும்பாலான வங்கிகள் தனது வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில், புதிதாக அறிவிக்கப்பட்டு வட்டி விகித உயர்வு அப்படியே வாடிக்கையாளர்கள் தலையில் விதிக்கும் நிலையில் தான் உள்ளது.

ஈஎம்ஐ தொகை

ஈஎம்ஐ தொகை

இதை விட முக்கியமாக இதுவரை ஆர்பிஐ அறிவித்த வட்டி விகித உயர்வு மூலம் வங்கிகள் வாடிக்கையாளரின் கடனின் காலத்தை மட்டுமே உயர்த்தி வந்தது, ஆனால் இனி வரும் வட்டி விகித உயர்வு மூலம் ஈஎம்ஐ தொகையை அதிகரிக்க உள்ளது. இது மக்களின் பர்ஸ்-ஐ பெரிய அளவில் ஓட்டையாக்கும்.

ரெப்போ விகிதம்

ரெப்போ விகிதம்

ஏற்கனவே ரெப்போ விகிதம் கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டைக் கடந்த நிலையில், இப்புதிய வட்டி விகிதம் உயர்வு ஈஎம்ஐ தொகையைத் தான் பாதிக்கும். இதனால் டிசம்பர் 7 ஆம் தேதி ஆர்பிஐ அறிவிக்கும் அறிவிப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது.

வீட்டு கடன் கணக்கீடு

வீட்டு கடன் கணக்கீடு

இதேபோல் ஆர்பிஐ இந்த வட்டி விகித உயர்வு தான் கடைசியாக இருக்கும் என எதிர்ப்பாராக்கப்படுகிறது. உதாரணமாக 32 வயதான ஒருவர் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டுக் கடனை 20 வருடத்திற்கு ஏப்ரல் 2022ல் 6.95 சதவீத வட்டியில் கடன் வாங்கினால் அவருடைய ஈஎம்ஐ தொகை 23,169 ரூபாய் ஆகும்.

26000 ரூபாய்

26000 ரூபாய்

மே மாதத்தில் இருந்து ஆர்பிஐ தனது ரெப்போ விகிதத்தைச் சுமார் 1.90 சதவீதம் வரையில் அதிகரித்த நிலையில் தற்போது வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 8.85 சதவீதமாக உள்ளது, இதனால் ஈஎம்ஐ தொகை 26000 ரூபாயாக அதிகரித்திருக்கும்.

கடன் காலம்

கடன் காலம்

ஆனால் வங்கிகள் கடன் காலத்தை 20 வருடத்தில் 23 முதல் 25 வருடமாக உயர்த்தியிருக்கும், இதனால் ஈஎம்ஐ தொகையில் எவ்விதமான மாற்றமும் செய்யாமல் இருந்தது. டிசம்பர் 7 ஆம் தேதி அறிவிக்கப்பட்டும் 0.35 சதவீதம் வரையிலான வட்டி விகித உயர்வு மூலம் கடன் காலத்தை அதிகரிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது, இதனால் ஈஎம்ஐ தொகை அதிகரிக்கப்பட உள்ளது.

60 வயது வரம்பு

60 வயது வரம்பு

பொதுவாக வீட்டு கடன் வாங்குபவர்களுக்குச் சுமார் 60 வயது வரையில் வீட்டுக் கடன் செலுத்த வங்கிகள் அனுமதிக்கிறது, இந்தக் காலகட்டம் வரையில் கடன் காலத்தை உயர்த்தி விட்டு, கூடுதல் வட்டி விகித உயர்வுக்கு ஈஎம்ஐ தொகையை அதிகரிக்க உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+