ரிசர்வ் வங்கியின் இரு மாத நாணய கொள்கை கூட்டத்தில் எதிர்பார்த்தபடியே ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில், வீட்டுக் கடன் முதல் அனைத்து கடன்களுக்குமான வட்டி விகிதம் உயரும் காரணத்தால் மக்கள் சோகத்தில் உள்ளனர். இதேவேளையில் வட்டி விகித உயர்வால் எதிர்பார்த்த படியே பெரும் சரிவு இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட அளவிலான சரிவை வங்கித் துறையைத் தவிர அனைத்து துறையிலும் எதிரொலித்துள்ளது.
சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு அதிகமாகவும், நிஃப்டி 200 புள்ளிகளும் இழந்து வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில் பங்குச்சந்தையில் இழப்பைச் சந்திக்கும் மக்கள் முதல் கையில் இருக்கும் பணத்தைப் பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய வேண்டும் எனத் திட்டமிடும் மூத்த குடிமக்கள் வரை அனைவருக்கும் ரெப்போ விகித உயர்வு மூலம் குட்நியூஸ் வந்துள்ளது.

பொதுவாக ரெப்போ விகிதம் அடிப்படையில் வங்கிகள் வட்டியை உயர்த்தும் போது கடனுக்கான வட்டியை உயர்த்துவது மட்டும் அல்லாமல் வைப்பு நிதிக்கான வட்டியையும் உயர்த்தும் என்பதால் வங்கி வைப்பு நிதியில் முதலீடு செய்வோருக்கு 0.25 சதவீத ரெப்போ விகித உயர்வின் மூலம் கூடுதல் லாபம் கிடைக்க உள்ளது.
பிப்ரவரி 2023க்கு பின்பு வட்டி விகிதம் உயர்வதால் வைப்பு நிதியில் முதலீட்டுக்கான வட்டி உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிகள் MCLR கீழ் கடன் பெற்றவர்களுக்கான வட்டி திருத்த ஆலோசனை கூட்டத்தை விரைவில் துவங்க உள்ள நிலையில் வைப்பு நிதிக்கான வட்டி உயர்வும் அறிவிக்கப்படும்.
தற்போது பொதுத்துறை வங்கிகளில் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 6.45 முதல் 6.60 சதவீதம் வரையிலான வட்டி வருமானத்தைக் கொடுக்கிறது, இதுவே தனியார் வங்கிகள் என்றால் 6.30 முதல் 7 சதவீதம் வரையிலான வட்டி வருமானத்தைக் கொடுக்கிறது. ஆனால் NBFC, ஸ்மால் பைனான்ஸ் பேங்க் போன்றவை 7 முதல் 8.10 சதவீதம் வரையிலான வட்டி வருமானத்தைக் கொடுக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக வட்டி விகிதம் உயர்த்தப்படாமல் இருத்தக் காரணத்தால் மக்கள் FD-யை விடுத்துச் சிறு சேமிப்பு திட்டம், அரசு பத்திரங்களில் முதலீடு செய்யத் துவங்கினர். ஆனால் தற்போது இத்தகைய நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கிகள் எப்போது வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும்..?
ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை உயர்த்தினால் வங்கிகள் கட்டாயமாக வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும் என்ற கட்டாயமில்லை. இதேபோல் வங்கிகள் தங்களுடைய வர்த்தகத்திற்காக அதிகப்படியான நிதி வேண்டுமாயின் FD வட்டி விகிதத்தை உயர்த்தி நிதியைத் திரட்டும்.
ஆனால் தற்போது நாட்டின் முக்கிய வங்கிகளான ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை பெரும் பகுதி தொகையைப் பெற்றது. இதனால் வங்கித் துறையில் 2 வருடங்களுக்கு முன்பு இருந்தது போன்ற பணப்புழக்க கட்டுப்பாடுகள் இல்லை. எனவே வங்கிகளுக்கு தற்போது FD மீதான வட்டியை உயர்த்தி பணத்தை ஈட்ட வேண்டும் என்ற நிலை இல்லை.
இதேபோல் தற்போது பணவீக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தால் வங்கிகள் நீண்ட கால அடிப்படையில் அதிக வட்டியில் பணத்தை வைத்திருக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை இல்லை என மீரா மணி நிறுவனத்தின் ஆனந்த் ராத்தி தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் வங்கிகளின் தேவையின் அடிப்படையில் தான் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் உயரும்.


Click it and Unblock the Notifications
