ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் எதிர்பார்த்ததை போலவே வட்டி விகிதம் என்பது 25 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பணவீக்கம் என்பது குறையத் தொடங்கியிருந்தாலும், இது தொடர்ந்து குறையுமா? என்ற அச்சமும் இருந்து வருகின்றது. ஏனெனில் நிலவி வரும் ரெசசன் அச்சம், பணவீக்கம் உள்ளிட்ட பல காரணிகளுக்கு மத்தியில் வட்டி விகிதம் அதிகரித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த முடிவால் வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தினை உயர்த்தக் கூடும். அதேசமயம் வங்கிகள் அதன் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தினையும் அதிகரிக்கலாம்.
கடன் விகிதம்
பெஞ்ச் மார்க் கடன் விகிதங்கள் நிதி அடிப்படையிலான கடன் விகிதம் (MCLR) அல்லது ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடன் விகிதம் (RLLR) ஆக இருக்கலாம். ஆக இது ரிசர்வ் வங்கி வட்டி அதிகரிப்பினை செய்யும்போதெல்லாம், கடனுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம். இதன் காரணமாக கடன்களுக்கான மாத தவணையும் அதிகரிக்கலாம். இது மக்களின் பர்ஸினையும் பதம் பார்க்கலாம்.
இஎம்ஐ அதிகரிக்கலாம்
ஆர்பிஐ வங்கியானது அதன் வட்டி விகிதத்தினை 55 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 6.50% ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் மாத தவணையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கபபடுகிறது. இனி நீங்கள் மாத மாதம் செலுத்தும் மாத தவணை தொகையானது மேற்கொண்டு கூடுதலாக அதிகரிக்க வழிவகுக்கலாம்.
இது தான் காரணமா?
ரிசர்வ் வங்கியின் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர எடுக்கப்பட்ட ஒரு முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் பணவீக்கம் குறித்தான கவலைக்கு மத்தியில், இந்த வட்டி அதிகரிப்பானது செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கடந்த ஆண்டில் இருந்தே வட்டி விகிதமானது அதிகரித்து வரும் நிலையில், நடப்பு ஆண்டிலும் தொடர் கதையாகியுள்ளது. முன்னதாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை 225 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியிருந்தது நினைவுகூறத்தக்கது.
எஃப்.டி வட்டி அதிகரிக்கலாம்
இந்தியாவில் மிக முக்கியமான சேமிப்பு திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படும் பிக்சட் டெபாசிட் திட்டங்கள், இன்றும் நிலையான வருமானம் தரும் திட்டங்களாக பார்க்கப்படுகின்றன. ஆக ரிசர்வ் வங்கியின் முடிவால் அவர்களுக்கும் கூடுதலான வருமானம் பெறலாம். ஏற்கனவே கடந்த ஆண்டில் 225 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ள நிலையில், சில வங்கிகள் வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளன. இது மீண்டும் அதிகரிப்பு செய்ய வழிவகுக்கலாம்.
கார் கடன், வீட்டுக் கடன், தனி நபர் கடன்?
கடன் வளர்ச்சியானது அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இந்த காலகட்டத்தில் வட்டி விகிதம் அதிகரித்திருப்பது சற்றே தாக்கத்தினை ஏற்படுத்தலாம். குறிப்பாக கார் கடன், வீட்டுக் கடன், தனி நபர் கடன் என அனைத்துக்கும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க வழிவகுக்கலாம். இது அவர்களின் மாதாந்திர தவணையையும் அதிகரிக்க வழிவகுக்கலாம். மொத்தத்தில் சாமானிய மக்களின் பாக்கெட்டுகளை பதம் பார்க்க போவது உறுதி.


Click it and Unblock the Notifications