இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடந்த இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டம் அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கி இன்று முடிவு வெளியிடப்படுகிறது.
ரிசர்வ் வங்கி பணவீக்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் ரெப்போ விகிதத்தை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் வைத்திருக்கும் என கூறப்பட்டாலும், கணிசமான வாய்ப்புகளும் இருக்கத்தான் செய்கிறது.

இந்திய ரிசர்வ் வங்கி மே 2022 மற்றும் பிப்ரவரி 2023 க்கு இடையில் மட்டும் ஆர்பிஐ தனது பென்ச்மார்க் வட்டி விகிதமான ரெப்போ விகிதம் சுமார் 250 அடிப்படை புள்ளிகள் அதாவது 2.5 சதவீதம் வரையில் உயர்த்தியது. மே 2022 முன்பு ரெப்போ விகிதம் வெறும் 4.5 சதவீதம் மட்டுமே, இது தான் ஹோம் லோன், வாகன கடன் வாங்குவோருக்கு பொற்காலமாக இருந்தது.
இதன் பின்பு நடந்த ஏப்ரல், ஜூன், ஆகஸ்ட் கூட்டத்தில் ஆர்பிஐ தனது வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை. இந்த நிலையில் இன்று நடக்கும் கூட்டத்தில் ஆர்பிஐ தனது வட்டி விகிதத்தை உயர்த்துமா, குறைக்குமா என்ற எதிர்பார்ப்புக்கு பல அமைப்புகள், நிதியியல் வல்லுனர்கள் ரெப்போ விகிதத்தில் மாற்றம் இருக்காது என்றும் தொடர்ந்து 6.50 சதவீதமாக அறிவிக்கும் என கணித்துள்ளனர்.
இந்திய ரிசர்வ் வங்கி இன்றைய கூட்டத்தில் ரெப்போ விகித்தை உயர்த்தினால் வீட்டுக் கடன், வாகன கடன், நகை கடன், பர்சனல் லோன் என அனைத்து கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்து மக்கள் வாங்கிய கடனுக்கான ஈஎம்ஐ அதிகரிக்கும். இதேவேளையில் ரெப்போ விகிதம் உயர்த்தாவிட்டால் வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இருக்காது.
ஜூலை - செப்டம்பர் காலாண்டில் உணவு பணவீக்கம் 11- 13 சதவீதம் உயர வாய்ப்பு இல்லை என்றாலும் மாறுப்பட்ட மழை பொழிவு உணவு பணவீக்கத்தை உயர்வாகவே வைத்துள்ளது. இதனால் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நாணய கொள்கை கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது அதாவது ரெப்போ விகிதத்தை குறைக்க முடியாது.
இதை தாண்டி சில்லறை பணவீக்கம், அமெரிக்க பத்திர முதலீடுகள், மத்திய அரசின் நிதி பற்றாக்குறை இலக்கு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை குறைக்க வாய்ப்புகள் இல்லை என்றே சொல்லலாம்.
ஆனால் கச்சா எண்ணெய் விலை உயர்வால பணவீக்கம் உயரும் அச்சம் இருக்கும் காரணத்தாலும், அமெரிக்க பத்திர முதலீடுகள் அதிகரிப்பால் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரியும் காரணத்தாலும் இதை கட்டுப்படுத்த ரெப்போ விகிதத்தில் சிறிய அளவிலான மாற்றங்கள் செய்ய வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இதை பணபுழக்கத்தை கட்டுப்படுத்துவதன் அடிப்படையில் சரி செய்ய முடியும் எனவும் தெரிகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications