டெல்லி : நாட்டில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொருளாதாரம் என்னவாகுமோ? என்ற நிலையே நீடித்து வருகிறது. ஏற்கனவே இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து வரும் நிலையில், இன்று நடவிருக்கும் கூட்டத்தில், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கடந்த முறையே மக்கள் அவதிப்படக்கூடாது என்கிற எண்ணத்தில், குறைந்த வட்டியில் கடன் கிடைக்க வேண்டும் என் கிற நோக்கத்தில், ஆர்பிஐ தன் ரெபோ விகிதத்தினை 4 சதவீதமாக குறைத்திருந்தது. கடந்த மார்ச் 2020ல் 0.75% வட்டி விகிதத்தினையும், மே மாதத்தில் 0.40% வட்டியினை குறைந்த நிலையில், இன்று வட்டி குறைப்பில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அதோடு ரிவர்ஸ் ரெபோ விகிதமும் மாற்றமில்லாமல் 3.3 சதவீதமாக தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆக வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால், வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்திலும் மாற்றம் செய்வதற்கு வாய்ப்புகள் குறைவே.
நடப்பு ஆண்டின் முதல் பாதியில் உலகளாவிய பொருளாதார நடவடிக்கைகள் பலவீனமாக உள்ளன. கொரோனா புத்துயிர் பெரும் நிலையில், மீண்டும் லாக்டவுன் நீட்டிக்கப்பட்ட நிலையில் பொருளாதாரம் மீண்டும் மந்த நிலைக்கே தள்ளப்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரம் மீண்டு வருவதற்காக அறிகுறிகுறிகளும் குறைந்தே காணப்படுகின்றன என்றும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் ரியல் ஜிடிபி விகிதமானது மீண்டும் குறையலாம் என்றும் கூறியுள்ளார். போதுமான பணப்புழக்கம் இல்லாமல் மத்திய வங்கியானது வட்டி குறைப்பை செய்வதில் சாத்தியமில்லை. கொரோனா வைரஸ்க்கு எதிரான இந்த போராட்டமானது இது மிகவும் சவாலானது. கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், உள் நாட்டு பணவீக்கமான அதிகரித்துள்ளது. எனினும் விவசாயத்துறையில் வாய்ப்புகள் மேம்பட்ட்டுள்ளன என்றும் தாஸ் கூறியுள்ளார்.
உண்மையில் ரிசர்வ் வங்கி கூறுவது போல தற்போது பணப்புழக்கம் மக்கள் கையில் இல்லாத நிலியயில், வட்டி விகிதத்தில் மாற்றம் இருந்தாலும் அது எந்தளவுக்கு கைகொடுக்கும் என்று தெரியவில்லை.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications