இந்திய ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை இன்று வெளியிட்டது. கடந்த ஏப்ரல் மாத கூட்டத்தை போலவே ஜூன் கூட்டத்திலும் ஆர்பிஐ தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 6.5 சதவீதமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் நிலவிய அதிகப்படியான பணவீக்கம் மற்றும் பணபுழக்கத்தை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு மே மாதம் முதல் சுமார் 250 அடிப்படை புள்ளிகளை ரெப்போ விகிதத்தில் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கியின் இன்றைய அறிவிப்பு மூலம் வங்கிகளில் கடன் மற்றும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்ய அடிப்படையாக இருக்கும் ரெப்போ விகிதத்தை மாற்றாத்து மூலம் வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை அடுத்த 2 மாதங்களுக்கு எவ்விதமான மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஒருவருடமாக ஆர்பிஐ பணவீக்கம் மற்றும் பணபுழக்கத்தை கட்டுப்படுத்த ரெப்போ விகித்தை 250 அடிப்படை புள்ளிகளை உயர்த்திய காரணத்தால் புதிதாக வீடு வாங்குவோர் அனைவரும் தங்களது முடிவில் பின்வாங்கினர். இதனால் ரியல் எஸ்டேட் வர்த்தகமும் கணிசமான பாதிப்பு ஏற்பட்டது.
தற்போது கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்திய பின்பு இந்திய ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகித்தை உயர்த்தாதது மூலம் நாட்டின் பொருளாதாரம், வளர்ச்சி, பணவீக்கத்தில் இந்தியா சாதகமான சூழ்நிலையில் இருப்பது உறுதி செய்கிறது.
ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை ஏப்ரல் கூட்டத்தை தொடர்ந்து ஜூன் கூட்டத்திலும் பணவீக்கத்தை குறைக்காதது வீட்டு கடன் மூலம் சொந்த வீடு வாங்குவோருக்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது. இதன் மூலம் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் 8.7 சதவீதம் முதல் 9.65 சதவீதம் வரையிலேயே தொடர உள்ளது.
ஆர்பிஐ அறிவிப்பை தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவது மூலம் வங்கிகளிடம் போதுமான நிதிஆதாரம் டெபாசிட் மூலம் பெற்றுள்ளதன் வாயிலாக வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் இல்லை. தற்போது ரெப்போ விகித்ததை உயர்த்தாதை தொடர்ந்து வங்கிகள் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தவும், வாய்ப்பு இல்லை, குறைக்கவும் வாய்ப்பு குறைவு. இதனால் வைப்பு நிதியில் முதலீடு செய்வோருக்கு இது ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.
இந்த நிலையில் இனி வரும் காலத்தில் ரெப்போ விகிதம் குறைக்கப்படுமே தவிர உயர்த்தப்படாது. இதனால் பிப்ரவரி மாத கூட்டத்தில் ஆர்பிஐ தனது வட்டி விகிதத்தை குறைக்கப்படலாம் என கணிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications