ஆர்பிஐ இன்றைய கூட்டத்தில் ரெப்போ விகித்தை உயர்த்தினால் வீட்டுக் கடன், வாகன கடன், நகை கடன், பர்சனல் லோன் என அனைத்து கடனுக்கான வட்டி விகதம் உயர்ந்து மக்கள் வாங்கிய கடனுக்கான ஈஎம்ஐ அதிகரிக்கும் என்ற அச்சத்தில் மக்கள் இருந்த நிலையில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் குட்நியூஸ் கொடுத்துள்ளார்.
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ஆகஸ்ட் 8 ஆம் தேதி MPC கூட்டம் இன்று முடிந்த நிலையில் ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை, ரெப்போ விகிதம் 6.50 சதவீதம் தொடரும் என்ன அறிவித்துள்ளார். வங்கி கடனுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்காது, இதனால் மக்கள் வாங்கிய கடனுக்கான ஈஎம்ஐ-யில் எவ்விதமான மாற்றமும் இருக்காது.

ரெப்போ விகிதம் 6.5 சதவீதம் என்பதில் மாற்றமில்லை என அறிவிக்க ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறிய நிலையில் தொடர்ந்து 3வது முறையாக ரெப்போ விகிதம் மாற்றப்படவில்லை என்பது சாமானிய மக்களுக்கு பெரிய அளவில் மன நிம்மதியை கொடுத்துள்ளது
SDF விகிதம் 6.25 சதவீதம், MSF விகிதம் 6.75 சதவீதம், CRR விகிதம் 4.5 சதவீதமாக தொடரும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். நாட்டின் பணவீக்கம் பாதிக்கப்பட்டு உள்ளதால் ரெப்போ விகிதம் குறைப்பு அடுத்த ஜூன் காலாண்டு வரையில் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
2024 ஆம் நிதியாண்டின் சில்லறை விலை பணவீக்கம் கணிப்பு 5.1% சதவீதத்தில் இருந்து 5.4 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது- ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ், ஆர்பிஐ அடுத்த 4 காலாண்டின் சில்லறை விலை பணவீக்கம் அளவுகளையும் வெளியிட்டு உள்ளது.
2024 ஆம் நிதியாண்டு 2வது காலாண்டில் 6.2% முன்பு கணிக்கப்பட்ட அளவு 5.2%, 2024 ஆம் நிதியாண்டு 3வது காலாண்டில் 5.7% முன்பு கணிக்கப்பட்ட அளவு 5.4%, 2024 ஆம் நிதியாண்டு 4வது காலாண்டில் 5.2% முன்பு கணிக்கப்பட்ட அளவு 5.2%, 2025 ஆம் நிதியாண்டு முதல் காலாண்டில் 5.2%.
2024 ஆம் நிதியாண்டின் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 6.5 சதவீதத்தில் மாற்றமில்லை என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். 2024 ஆம் நிதியாண்டு முதல் காலாண்டில் 8% முன்பு கணிக்கப்பட்ட அளவு 7.8%, 2024 ஆம் நிதியாண்டு 2வது காலாண்டில் 6.5% முன்பு கணிக்கப்பட்ட அளவு 6.2%, 2024 ஆம் நிதியாண்டு 3வது காலாண்டில் 6% முன்பு கணிக்கப்பட்ட அளவு 6.1%, 2024 ஆம் நிதியாண்டு 4வது காலாண்டில் 5.7% முன்பு கணிக்கப்பட்ட அளவு 5.9%, 2025 ஆம் நிதியாண்டு முதல் காலாண்டில் 6.6%.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications