வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் மும்பையில் கடந்த திங்கட்கிழமை அன்று தொடங்கியது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் நிதி கொள்கை கூட்டத்தில் நாட்டின் பொருளாதாம், ஈரான் போரால் ஏற்பட்டுள்ள தாக்கம், பணவீக்கம் , நாட்டின் ஜிடிபி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முக்கியமான ஆலோசனை நடத்தினர்.

ஈரான் போர் தொடங்கிய பிறகு நடைபெறும் முதல் ரிசர்வ் வங்கி நிதி கொள்கை கூட்டம் இது. அதுமட்டுமில்லாமல் நடப்பு நிதியாண்டின் முதல் கூட்டம் என்பதாலும் பெரிய எதிர்பார்ப்புகள் நிலவின. ஏனெனில் ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் இந்தியாவிற்கு எல்பிஜி, கச்சா எண்ணெய் வரத்து நின்று போனது. இதன் காரணமாக எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டு உணவகங்கள் மூடப்பட்டன, உணவுகளின் விலை உயர்ந்தன. அதே வேளையில் வேறு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய், எல்பிஜி ஆகியவை வாங்கப்படுகின்றன. இதனால் அதிக அமெரிக்க டாலரை பயன்படுத்தி வெளிநாட்டு கரன்சி கையிருப்பும் குறைந்துள்ளது.

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

இந்த சூழலில் இரண்டு நாட்களாக நடந்த நிதி கொள்கை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிப்பதற்காக ரிசர்வ் வங்கி ஆளுநரான சஞ்சய் மல்ஹோத்ரா இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வங்கிகளுக்கான குறுகிய கால கடன்கள் மீதான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார் . இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதம் என்ற அளவிலேயே தொடர்கிறது.

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்பதால் வீடு , வாகன கடன்கள், தனிநபர் கடன்கள், தங்க நகை கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது. ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியிலும் ரிசர்வ் வங்கி வட்டியை மாற்றாமல் இருப்பது சற்றே நிவாரணம் தருகிறது.

கடந்த ஆண்டில் மட்டும் 125 அடிப்படை புள்ளிகள் அதாவது 1.25% வரை வரை ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து பெரிய சர்ப்பிரைஸ் தந்தது ரிசர்வ் வங்கி. இதனை அடுத்து பல்வேறு வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய வீட்டுக் கடன் , வாகன கடன் , தங்கு நகை கடன்கள் மீதான வட்டி விகிதங்களை குறைத்தன. ரெப்போ வட்டி குறைப்பு நம் கடன்களில் பல ஆயிரங்களையும் பல லட்சங்களையும் சேமித்து தந்தது.

இந்த முறை வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என குட் ரிட்டர்ன்ஸ் நடத்திய கருத்து கணிப்பிலும் பெரும்பாலான நிபுணர்கள் கருத்து கூறினர். அதே தான் தற்போது நடந்திருக்கிறது. ரெப்போ வட்டி என்பது ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் வழங்கும் கடன்களுக்கான வட்டி ஆகும். அது குறைக்கப்பட்டால் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களின் வட்டி குறையும், உயர்த்தப்பட்டால் நம் கடன்களின் வட்டி உயரும். தற்போத ரெப்போ வட்டியில் மாற்றமில்லை என்பதால் நம் வீட்டு கடன், வாகன கடன்களுக்கான வட்டி விகிதமும் மாறாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+