மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் மும்பையில் கடந்த புதன்கிழமை அன்று தொடங்கியது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் நிதி கொள்கை கூட்டத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முக்கியமான ஆலோசனையை நடத்தினர்.
நிதி கொள்கை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிப்பதற்காக ரிசர்வ் வங்கி ஆளுநரான சஞ்சய் மல்ஹோத்ரா இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வங்கிகளுக்கான குறுகிய கால கடன்கள் மீதான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார் . இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் என்பது 5.25 சதவீதம் என்ற அளவிலேயே தொடர்கிறது.

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்பதால் வீடு , வாகன கடன்கள், தனிநபர் கடன்கள், தங்க நகை கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது. இந்தியர்களை பொறுத்தவரை இது சற்று ஏமாற்றம் அளிக்கும் ஒரு தகவலாகவே மாறி இருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய ரிசர்வ் வங்கி 0.25% என ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தது. இதனை அடுத்து ஏப்ரல் மாதத்தில் மேலும் 0.25 சதவீதம் குறைத்து வட்டி விகிதத்தை 6 சதவீதம் என மாற்றியது.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டத்தில் 50 அடிப்படை புள்ளிகள் வரை ரெப்போ வட்டி குறைக்கப்பட்டது. இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 5.5% என ஆனது. பின்னர் டிசம்பர் மாத கூட்டத்தில் மேலும் 25 அடிப்படை புள்ளிகளை குறைத்தது. அதாவது கடந்த ஓராண்டில் மட்டும் 125 அடிப்படை புள்ளிகள் அதாவது 1.25% வரை வரை ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதனை அடுத்து பல்வேறு வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய வீட்டுக் கடன் , வாகன கடன் , தங்கு நகை கடன்கள் மீதான வட்டி விகிதங்களை குறைத்தன .
இந்த முறை வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்றே பெரும்பாலான நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். அதற்கு ஏற்ப ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தில் எந்த ,மாற்றத்தையும், கொண்டு வரவில்லை. ரெப்போ வட்டி என்பது ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் வழங்கும் கடன்களுக்கான வட்டி ஆகும். இது குறைக்கப்படவில்லை என்பதால் வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கான கடன் வட்டிகளை குறைக்காது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications