இந்திய பொருளாதாரத்தின் வேகமாக வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமாகவும், அவசியமானதாகவும் இருக்க வேண்டியது பணவீக்கம் குறைவாக இருப்பது தான். பணவீக்கம் பொருட்கள் மற்றும் சேவையின் விலையை மட்டும் நிர்ணயம் செய்வது மட்டும் அல்லாமல் மக்களின் நுகரும் அளவையும் காட்டுகிறது.
இந்த நிலையில் இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் போக்கைத் தீர்மானிக்கும் core inflation அளவை கட்டுப்படுத்துவதில் அதிகம் ஆதிக்கம் செலுத்துவது எது என்பது குறித்த கேள்விக்கு ஆர்பிஐ ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது.

உணவு விலை உயர்வை விட எரிபொருள் விலை உயர்வு பணவீக்கத்தை அதிகமாகப் பாதிக்கிறது என்று ரிசர்வ் வங்கி பொருளியல் நிபுணர்கள் நடத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. உலகளாவிய பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை உருவாகும் சமயங்களில், எரிபொருள் விலை உயர்வால் ஏற்படும் அதிர்வலைகள் பணவீக்கத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி நெகிழ்வான பணவீக்க இலக்கு நிர்ணயத்தை (flexible inflation targeting) கொண்டு வந்ததில் இருந்து, உணவு விலை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது சிறப்பாக இருப்பதாகவும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
உணவு மற்றும் எரிபொருள் விலை பணவீக்க அதிர்வலைகள் எந்த அளவுக்கு நாணய கொள்கையில் ஆதிக்கம் செலுத்துகிறது என ஆய்வு செய்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
உணவு விலை அதிர்வலைகள் பணவீக்கத்தின் மீது செலுத்தும் தாக்கம் 2வது முதல் 3வது காலாண்டுகளில் அதிகமாக இருப்பதைக் கண்டறிந்த ஆய்வறிக்கை, அதன் பிறகு அது குறையத் தொடங்குகிறது. 1990களின் பிற்பகுதியில் உணவு விலை அதிர்வலைகள் பணவீக்கத்தை அதிகம் பாதித்தன, ஆனால் காலப்போக்கில் இந்த தாக்கம் குறைந்துள்ளது என்று இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை அதிர்வலைகளைப் பொறுத்தவரை, உலகளாவிய எரிசக்தி விலைகளில் ஏற்படும் பாதிப்பு காரணமாக, சமீப காலங்களில் பணவீக்கத்தின் மீது குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
எரிபொருள் விலை உயர்வின் தாக்கம் நீண்ட காலத்திற்கு நீடிக்கும். இருப்பினும், எரிபொருள் விலையில் ஒரு சதவீதம் உயர்வு பணவீக்கத்தை எந்த அளவு பாதிக்கும் என்பதைப் பார்க்கும்போது, 2000களில் 5-6 காலாண்டுகளாக இருந்த இந்த உச்ச தாக்கம், 2018-2023 காலகட்டத்தில் 2-3 காலாண்டுகளாகக் குறைந்துள்ளது. இதுவும் காலக்கப்போக்கில் அதன் ஆதிக்க காலத்தைக் குறைத்து வருகிறது.
இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக core inflation அளவில் உணவு பணவீக்கத்தை விட எரிபொருள் பணவீக்கம் குறைவாக இருக்க வேண்டும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications