ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா சனிக்கிழமை அன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் 2000 ரூபாய் நோட்டுகளில் 98.18 சதவீதம் மட்டுமே வங்கிகளுக்கு திரும்பி வந்துள்ளதாகவும், 6,471 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 2023-ஆம் ஆண்டின் மே 19-ஆம் தேதி அன்று, இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
அதேபோல 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வாங்கி அறிவித்த மே 19-ஆம் தேதி அன்று மொத்தமாக ரூ.3.56 லட்சம் கோடி தொகை புழக்கத்தில் இருந்தது. 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி நிலவரப்படி இந்தத் தொகை 6,471 கோடியாக குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தபோது, 2023 ஆம் ஆண்டின் அக்டோபர் 7ஆம் தேதி வரையில் அனைத்து வங்கி கிளைகளிலும் டெபாசிட் செய்யலாம் என்றும் ஆர்பிஐ தெரிவித்தது.

இன்னமும் ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் வசதி உள்ளது. அப்படி இல்லை என்றாலும் நீங்கள் தபால் நிலையங்கள் மூலமாகவும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். ரிசர்வ் வங்கியின் அலுவலகங்களுக்கு நேரடியாக சென்றும் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்யலாம்.
பணம் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு பொருளாதார ரீதியாக ஏற்பட்ட பணத் தேவை விரைவாக பூர்த்தி செய்யும் விதமாக 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இந்த நோட்டுகள் புழக்கத்திற்கு வந்த பிறகு அவற்றின் தேவையும் குறையத் தொடங்கியது. மறுபுறம் 2000 ரூபாய் நோட்டுகள் அன்றாட பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாமலும், அதிக மதிப்பு கொண்டதாகவும் இருந்ததால் கள்ள நோட்டுகள் மற்றும் பதுக்களுக்கும் வாய்ப்பாக மாறியது. இதனால் அவை 2023-ஆம் ஆண்டு திரும்பப் பெறப்பட்டது.
பொதுவாக பொருளாதாரத்தை சீரமைக்கவும் பணப்புழக்கத்தில் வெளிப்படை தன்மையை அதிகரிக்கவும் அவ்வப்போது ஆர்பிஐ இது போன்ற நடவடிக்கைகளை எடுக்கும். ஆனாலும் இன்னும் சிலர் தங்களிடம் உள்ள பணத்தை திருப்பி டெபாசிட் செய்யாமல் உள்ளனர். ஆர்பிஐ தகவல் படி இன்னும் 2 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் இந்திய மக்களிடம் உள்ளது.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications