Fixed deposit திட்டங்கள்: வங்கிகளுக்கு ஆர்பிஐ வைத்த செக்..!! எல்லாமே மாறுது..!!

இந்திய ரிசர்வ் வங்கி , வாடிக்கையாளர்கள் வங்கிகளில் பணம் டெபாசிட் செய்வது தொடர்பான விதிகளை மாற்றி அமைத்துள்ளது. இந்த புதிய விதிகள் அக்டோபர் 1, 2026 முதல் அமலுக்கு வருகின்றன. புதிய விதிகள் நம் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதுவரை, ஒரு வங்கியின் வெவ்வேறு கிளைகளில் ஒரே மாதிரியான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்கள் வழங்கப்பட்டு வந்தன. இனி அவ்வாறு செய்ய முடியாது. ஒரு வங்கியின் அனைத்து கிளைகளிலும், ஒரே தேதியில் மற்றும் ஒரே தொகையில் செய்யப்படும் அனைத்து வைப்புத்தொகைகளுக்கும் ஒரே மாதிரியான வட்டி விகிதத்தை மட்டுமே வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

Fixed deposit திட்டங்கள்: வங்கிகளுக்கு ஆர்பிஐ வைத்த செக்..!!  எல்லாமே மாறுது..!!

வங்கிகள் தங்களுடைய வட்டி விகித அட்டவணையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் முன்பே, தங்கள் இணையதளத்தில் தெளிவாக பதிவேற்ற வேண்டும். வங்கிகள் தாங்கள் அறிவித்த விகிதத்தின்படி மட்டுமே வட்டி வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறை தெரிவிக்கிறது.

மொத்த வைப்புத்தொகைக்கு (Bulk Deposits) வட்டி விகிதங்களை நிர்ணயிப்பதில் வங்கிகளுக்கு அதிக நெகிழ்வுத்தன்மை வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த வட்டி விகிதங்களை ஒவ்வொரு வேலை நாளும் காலை 10:00 மணிக்கு வங்கிகள் தங்கள் இணையதளத்தில் கட்டாயம் பதிவேற்ற வேண்டும் என கூறியுள்ளது.

Also Read

வட்டி விகிதங்கள் இணையதளத்தில் முன்கூட்டியே வெளியிடப்படுவதால், வெவ்வேறு வங்கிகளின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு, முதலீட்டாளர்கள் சிறந்த முடிவை எடுக்க முடியும். மேலும் நீங்கள் எந்த கிளையில் முதலீடு செய்தாலும் ஒரே மாதிரியான வட்டி கிடைக்கும் என்பதால், குழப்பங்கள் தவிர்க்கப்படும்.

இந்த புதிய விதிமுறை அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. எனவே உங்கள் ஃபிக்சட் டெபாசிட் முதிர்ச்சியடைந்தால் அதனை புதுப்பிக்கும் முன் உங்கள் வங்கியின் புதிய வட்டி விகித அட்டவணையை சரிபார்ப்பது நல்லது.இந்த புதிய விதி வணிக வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் என அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும்.

Recommended For You

வட்டி விகித நிர்ணயத்தில் வெளிப்படைதன்மையை கொண்டு வருவதும், முதலீட்டாளர்களுக்கு சமமான வாய்ப்புகளை உறுதி செய்வதும் தான் இந்த விதியின் நோக்கம் என்கிறது ரிசர்வ் வங்கி. இது தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால், வாடிக்கையாளர்கள் RBI-இன் sachet.rbi.org.in இணையதளம் அல்லது வங்கி குறைதீர்ப்பாளர் மூலம் புகார் தெரிவிக்கலாம்.

இந்த அறிவிப்பின் மூலம் ஏற்கனவே நாம் செய்த ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதமோ அல்லது நமக்கு கிடைக்கும் முதிர்வு தொகையோ மாறாது. ஆனால் டெபாசிட் செய்யும் முன்பே பல்வேறு வங்கிகளின் வட்டி விகிதங்களை ஆய்வு செய்து நல்ல முடிவை எடுக்க உதவும். அதே போல வெளிப்படை தன்மை அதிகமாகும். மொத்தமாக பல்க் டெபாசிட் செய்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+