பொதுவாக வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC) எவ்வாறு செயல்படுகிறது என்பதை நிர்வகிக்கும் பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு உண்டு. இந்நிறுவனங்களில் செயல்முறைகளில் ஏதேனும் குழப்பங்கள் ஏற்பட்டால் உடனடியாக ஆர்பிஐ அதற்கு நடவடிக்கை எடுக்கும். அப்படித்தான் இந்தியாவில் உள்ள வங்கி சாரா நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளையும் ஆர்பிஐ கண்காணித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 நிதி நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக ஆர்பிஐ அதன் உரிமத்தை ரத்து செய்துள்ளது.
தமிழகம் மட்டுமின்றி ஆர்பிஐ, சத்தீஸ்கர் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 2 NBFC நிறுவனங்களின் உரிமத்தையும் ரத்து செய்துள்ளது. ஆக மொத்தம் 4 நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு வங்கிசார நிதி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ததற்கான காரணங்கள் குறித்து ஆர்பிஐ தரப்பிலிருந்து எந்தவித பதிலும் வரவில்லை.

தமிழ்நாட்டைச் சேர்ந்த PVP கேப்பிட்டல் லிமிடெட் மற்றும் ரெயின்போ பைனான்ஸ் இந்தியா லிமிடெட், சத்தீஸ்கரை தலமாகக் கொண்ட மார்வா பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ராம் அலாய் காஸ்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய 4 வங்கி சாரா நிதி நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த PVP கேபிட்டல் லிமிடெட் மற்றும் ரெயின்போ பைனான்ஸ் இந்தியா ஆகியவற்றின் உரிமம் நவம்பர் மாதம் 21-ஆம் தேதி அன்று ரத்து செய்யப்பட்டன. பிவிபி கேப்பிட்டல் முதன்முதலாக 2002-ஆம் ஆண்டின் மே 23-ஆம் தேதி அன்று பதிவு செய்யப்பட்டது. அதேபோல ரெயின்போ ரெயின்போ பைனான்ஸ் இந்தியா 1998-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் தேதி அன்று பதிவு செய்யப்பட்டது.
2017-ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி அன்று பதிவு செய்யப்பட்ட சத்தீஸ்கரைத் தலமாகக் கொண்ட மார்வா பைனான்ஸ் நவம்பர் 2024-ஆம் ஆண்டின் நவம்பர் 11-ஆம் தேதி அன்று ஆர்பிஐ ரத்து செய்தது. அதேபோல உத்தர் பிரதேசத்தை தளமாக கொண்ட ராம் அலாய் காஸ்டிங்ஸ் நிறுவனத்தை 2024-ஆம் ஆண்டின் நவம்பர் 26-ஆம் தேதி அன்று ரத்து செய்தது.
பொதுவாக ஆர்பிஐ சில விதிமீறல்கள் செய்யும் வங்கிகளை எதிர்த்து நடவடிக்கையை எடுக்கலாம். உதாரணமாக விதிகளை மீறி சேவை வழங்குதல், வாடிக்கையாளர் பணத்தை தவறாக பயன்படுத்துதல் போன்றவை இதில் அடங்கும். ஆனால் தற்போது இந்நிறுவனங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து எந்தவித காரணமும் ஆர்பிஐ தரப்பிலிருந்து வரவில்லை. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications