உங்களிடம் வங்கி கணக்கு இருக்கா? எத்தனை நாட்களில் உங்கள் வங்கி கணக்கு செயலிழக்கும் தெரியுமா?

இன்றைய காலகட்டத்தில் அனைவருக்குமே ஏதோ ஒரு வங்கியில் கணக்கு உள்ளது. வங்கி கணக்கு வைத்திருப்பதற்கான காரணம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். தங்கள் வசதியைப் பொறுத்து ஒவ்வொருவரும் ஒரு வங்கி கணக்கைத் திறந்து வைத்திருக்கின்றனர். சிலர் சேமிப்புக்காகவும் சிலர் வணிகம் தொடர்பான பரிவர்த்தனைக்காகவும் வங்கி கணக்கு திறக்கின்றனர். இது தவிர FD, RD உள்ளிட்ட அரசு திட்டங்களை பயன்படுத்தவும் சிலர் கணக்கு திறக்கின்றனர். ஆனால் திறக்கப்பட்டு இருக்கும் வங்கி கணக்கில், நீங்கள் அடிக்கடி பரிவர்த்தனைகள் செய்யாவிட்டால், உங்கள் வங்கி கணக்கு மூடப்படலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

இந்திய ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி வங்கிக் கணக்கில் கட்டாயம் பரிவர்த்தனைகள் நடக்க வேண்டும். அப்படி இல்லையெனில் உங்கள் கணக்கு செயலற்ற கணக்காக மாற்றப்படும். உங்கள் வங்கி கணக்கு எத்தனை நாட்கள் வரை பயன்படுத்தாமல் இருந்தால் செயலிழக்கும் என்பது பற்றி பார்ப்போம்.

உங்களிடம் வங்கி கணக்கு இருக்கா? எத்தனை நாட்களில் உங்கள் வங்கி கணக்கு செயலிழக்கும் தெரியுமா?

நீங்களும் வங்கி கணக்கு வைத்திருப்பவராக இருந்தால் 730 நாட்களுக்குள் கட்டாயம் ஒரு பரிவர்த்தனையாவது செய்ய வேண்டும். அதாவது சுமார் 2 ஆண்டுகள். 2 ஆண்டுகளுக்கும் மேலாக உங்கள் வங்கி கணக்கில் எந்த பரிவர்த்தனையும் செய்யப்படாமல் இருந்தால் உங்கள் கணக்கு செயலற்ற கணக்காக மாற்றப்படும்.

வங்கி கணக்கு செயலற்றதாக மாறினால் என்ன நடக்கும்?: வங்கி கணக்கு செயலற்ற கணக்காக மாறினால் உங்கள் கணக்கில் இருந்து எந்த வித பரிவர்த்தனையும் மேற்கொள்ள முடியாது. உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யும் தொகையையும் பயன்படுத்த முடியாது. அந்தத் தொகை வங்கி கணக்கிலேயே இருக்கும். அதற்கு வழக்கமான சேவிங்ஸ் அக்கவுண்ட் வட்டி வழங்கப்படும்.

வங்கிக் கணக்கை எவ்வாறு ஆக்டிவேட் செய்வது?: வங்கிக் கணக்கை மீண்டும் செயல்படுத்த நீங்கள் கேஒய்சி ஆவணங்களை வழங்க வேண்டி வரலாம். கேஒய்சி படிவத்தை சமர்ப்பித்து இரண்டு புகைப்படங்கள், பான் கார்டு, ஆதார் கார்டு போன்ற ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். கூட்டு கணக்காக இருந்தால்.. யார் யார் சேர்ந்து கூட்டுக் கணக்கு திறந்தீர்களோ அவர்கள் அனைவரின் கேஒய்சி ஆவணங்களும் தேவைப்படலாம்.

ஏன் இந்த நடவடிக்கை?: பொதுவாக பயன்படுத்தப்படாத வங்கி கணக்குகளை குறிவைத்து தான் பெரும்பாலான மோசடிகள் நடக்கிறது. பயன்படுத்தாத வங்கி கணக்கை நாம் என்ன செய்வோம் என்று நினைத்துப் பாருங்கள். எந்தவித அறிக்கைகளையும் பார்க்க மாட்டோம், அது தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளாமல் இருப்போம். இது போன்ற சூழ்நிலையில் யார் அதை பயன்படுத்தி என்ன செய்கின்றனர்? என்பது நமக்கு தெரியாமலேயே போய்விடும். ஒருவகையில் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை பயன்படுத்தாத வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நல்லது தான்.. இருந்தாலும் இது அரசாங்க திட்டங்கள் மற்றும் பிற திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டிருந்தால் கண்டிப்பாக KYC ஆவணங்களை வழங்கி அக்கவுண்ட்டை செயல்படுத்துவது அவசியம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+