மாஸ்டர்கார்டு மீதான RBI தடை.. வங்கிகளுக்கும், மக்களுக்கும் என்ன பாதிப்பு
இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் அனைத்தும் தங்களது இந்திய வாடிக்கையாளர்களின் டேட்டா-வை இந்தியாவில் மட்டும் தான் சேமிக்க வேண்டும் என அரசு விதித்த உத்தரவை மாஸ்டர்கார்ட் நிறுவனம் பின்பற்றவில்லை.

இதன் எதிரொலியாக ரிசர்வ் வங்கி நேற்று மாஸ்ட்ர்கார்டு நிறுவனத்திற்கு இந்தியாவில் ஜூலை 22ஆம் தேதி முதல் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கத் தடை உத்தரவை விடுத்துள்ளது. மாஸ்டர்கார்ட் நிறுவனத்திற்குப் போதிய அவகாசம், வாய்ப்புகள் கொடுத்த பின்பும் அரசு விதிகளை மதிக்காத காரணத்தால் இத்தகைய முடிவை எடுத்துள்ளது.
இதனால் வங்கிகளுக்கும், மக்களுக்கும் என்ன பாதிப்பு...?!
வங்கிகளுக்கு என்ன பாதிப்பு..?!
இந்தியாவில் மாஸ்டர்கார்ட் நிறுவனம் ஹெச்டிஎப்சி வங்கி, யெஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, ஆர்பிஎல் வங்கி எனப் பல வங்கிகளிடம் கூட்டணி வைத்துள்ளது. இந்தத் தடை உத்தரவால் இனி வங்கிகள் தனது புதிய வாடிக்கையாளர்களுக்கு மாஸ்டர்கார்ட் நிறுவனத்தின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் அளிக்க முடியாது.
மக்களுக்கு என்ன பாதிப்பு..?
இந்தியாவின் மொத்த கார்டு பேமெண்ட் சேவையில் சுமார் 30 சதவீதம் மாஸ்டர்கார்ட் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகள் படி புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க மட்டுமே தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் பழைய வாடிக்கையாளர்கள் எவ்விதமான பிரச்சனையுமின்றி டெபிட் கார்ட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்த முடியும்.
ஆர்பிஐ
முதல் முறை அல்ல..
ரிசர்வ் வங்கி இதுபோல் தடை விதிப்பது இது முதல் முறை அல்ல, மே 1ஆம் தேதி அமெரிக்க எக்ஸ்பிரஸ், டைனர்ஸ் கிளப் போன்ற நிறுவனத்திற்கும் இதேபோன்ற கட்டுப்பாட்டை விதித்தது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications