பொதுவாக இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு இணங்க தான் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் செயல்படும். அந்த வகையில் தற்போது தனிநபர்களுக்கு தங்கக் கடன் வழங்குவதற்கும் ஆர்பிஐ சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த விதிகளை வங்கிகள் மற்றும் NBFC நிறுவனங்கள் பின்பற்றியாக வேண்டும். குறிப்பாக தங்கக் கடன் வழங்குவதற்கு சீரான விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை நிறுவுவதற்காக தான் இத்தகைய விதிகளை ஆர்பிஐ வகுத்துள்ளது.
லோன் டு வேல்யூ ரேஷியோ (LTV): ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி அனைத்து கடன் வழங்குநர்களும் தங்கத்தின் கடன் மதிப்பை 75 சதவீதமாக நிர்ணயிக்கக் கூறியுள்ளது. அதாவது நீங்கள் 100 ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை பிணையமாக வைத்துக் கடன் பெறுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு கடன் வழங்குனர் அதிகபட்சமாக 75,000 ரூபாய் வரை மட்டுமே கடனாக வழங்க முடியும்.

கடன் பெறுபவர்களின் உரிமையைச் சரி பார்க்க வேண்டும்: பிணையமாக பயன்படுத்தப்படும் தங்கத்திற்கான உரிமையைக் கடன் வாங்குபவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஒருவேளை தங்கம் சந்தேகத்திற்குரியதாக இருந்தால் கடன் வழங்குபவர்கள் கடன் வழங்கக் கூடாது. பிணையத்தின் நம்பகத்தன்மையை சரி பார்ப்பதற்கான ஆவணங்களை கடன் பெறுபவர்கள் வைத்திருக்க வேண்டும். உதாரணமாக தங்கம் வாங்கிய ரசீதுகள் அவை கிடைக்கவில்லை என்றால் தங்கத்தின் உரிமையை தீர்மானிக்க பொருத்தமான ஆவணம் போன்றவற்றை கடன் பெறுபவரிடம் பெற ஆர்பிஐ முன்மொழிந்துள்ளது.
வங்கிகளிடம் தங்கத்தின் தூய்மை சான்றிதழைப் பெற வேண்டும்: வங்கிகளிடமிருந்து தங்கத்தின் தூய்மை சான்றிதழை கடன் பெறுபவர்கள் பெற வேண்டும். கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் பெறுபவர்களுக்கு தங்கத்தின் தூய்மை குறித்த விவரங்களை வழங்க வேண்டும். இதற்காக கடன் வழங்குபவர் ப்யூரிட்டி சர்டிபிகேட்டை கொடுக்க வேண்டும் என்றும் முன்மொழிந்துள்ளது.
சில தங்கத்திற்கு மட்டுமே தங்கக் கடன்: இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் படி தங்க நகைகள், ஆபரணங்கள் மற்றும் குறிப்பிட்ட தங்க நாணயங்களுக்கு மட்டுமே தங்கக் கடன் கிடைக்கும்.
வெள்ளிக்கும் கடன் கிடைக்கும்: ஆர்பிஐ-இன் விதிமுறைகளின் படி சில வெள்ளிப் பொருட்களின் மீதும் கடன் பெற முடியும். தனி நபர்கள் வெள்ளி நகைகள், வெள்ளி ஆபரணங்கள் மற்றும் குறிப்பிட்ட வெள்ளி நாணயங்கள் மீதும் கடன் பெறலாம்.
கடன் வரம்பு: ஆபரணங்கள் மற்றும் நாணயங்களை பயன்படுத்தி கடன் வாங்குவதற்கு குறிப்பிட்ட வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஒரு கிலோ வரையிலான வெள்ளியை அடமானம் வைத்து கடன் பெறலாம். அதேபோல் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களைப் பூர்த்தி செய்யும் தங்க காயின்களுக்கு மட்டுமே கடன் கிடைக்கும்.
கடன் தொகைக்கான தங்கத்தின் மதிப்பை கணக்கிடுதல்: கடன் வாங்குபவர்களால் அடகு வைக்கப்படும் தங்கத்தின் மதிப்பை கணக்கிட கடன் வழங்குபவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களையும் ஆர்பிஐ பரிந்துரைத்துள்ளது. அதன்படி ஏற்றுக் கொள்ளப்படும் தங்கம் 22 கேரட் தங்கத்தின் விலையின் அடிப்படையில் தான் மதிப்பிடப்படும். 22 கேரட் தூய்மையை காட்டிலும் குறைவாக இருந்தால் 22 கேரட் தங்கத்திற்கு சமமாக தங்கத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.
அதாவது உங்களிடம் 10 கிராம் 18 கேரட் தங்கம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். தற்போது 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.85,000. எனவே இந்த 18 கேரட் தங்கத்தை வைத்து பார்க்கும் போது அவை 8.235 கிராம் 22 கேரட் தங்கத்தின் மதிப்புடையது என்று கடன் வழங்குநர் கருத்தில் கொள்ள வேண்டும்.
லோன் அக்ரிமெண்டில் முழு விவரங்களும் இருக்க வேண்டும்: தங்கத்தை வைத்து பெறுகின்ற கடனுக்கான ஒப்பந்தத்தில் முழு விவரங்களும் இருக்க வேண்டும். அதாவது தங்கத்தின் எடை, அதன் மதிப்பு, ஏல நடைமுறை விவரங்கள், தங்கம் எப்போது ஏலம் விடப்படும்? என்ற விபரங்கள், கடன் வாங்குபவருக்கு தீர்வு வழங்குவதற்கான அறிவிப்புகள், கடன் பெறுபவர்களுக்கு அதை மீட்பதற்கான காலம் ஆகியவை இதில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications