மத்திய அரசின் முயற்சி மாபெரும் வெற்றி, ஈரான் போர், ஏஐ முதலீடுகள் காரணமாக ரூபாய் மதிப்பு பெரிய அளவில் சரிந்த நிலையில், இதை சரி செய்ய டாலர் முதலீடுகளை ஈர்க்க மத்திய அரசும், ஆர்பிஐ இணைந்து ஒரு முக்கிய முடிவை எடுத்தது.
வெளிநாட்டில் இருக்கும் NRI-கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து டாலர் முதலீடுகளை ஈர்க்க FCNR வைப்பு நிதி மீதான வட்டி விகிதத்தை அதிகரிக்க முடிவு செய்தது. எனவே FCNR வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 3.5 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதம் வரையில் அதிகரித்தது. இதன் வாயிலாக சுமார் 127 பில்லியன் டாலர் அளவிலான தொகையை FCNR-B வைப்பு நிதி வாயிலாக திரட்டப்பட்டு உள்ளது.

இந்த வட்டி விகிதம் உயர்வு மூலம் 90 பில்லியன் டாவர் வரையில் ஈர்க்க முடியும் என ஆர்பிஐ ஏற்கனவே கணித்திருந்த நிலையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 127 பில்லியன் டாலர் அளவிலான தொகை கிடைத்துள்ளது. மேலும் கமர்சியல் கடன், வெளிநாட்டு நாணய கடன் போன்றவற்றையும் சேர்த்தால் மொத்தம் 136 பில்லியன் டாலர் அளவிலான தொகை திரட்டப்பட்டு உள்ளது.
இதன் விளைவாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 மாத உயர்வை தொட்டு உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் ரூபாய் மதிப்பு 67 பைசா அதிகரித்து தற்போது 94.30 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய வர்த்தகத்தில் 94.97 ரூபாயில் வர்த்தகம் முடிந்தது.
ஈரான் போர் உச்சம் அடைந்து, கச்சா எண்ணெய் விலை 110 டாலருக்கு மேல் சென்ற போது டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மே 20ஆம் தேதி 96.79 முதல் 97.12 வரையில் வர்த்தகமானது. இந்த FCNR வைப்பு நிதி வாயிலாக 136 பில்லியன் டாலர் அளவிலான டாலர் இருப்பை சேர்த்து மூலம் ரூபாய் மதிப்பு 94.30 வரை குறைந்துள்ளது.
இந்த அன்னிய செலாவணி மூலம் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தனது நாணய இருப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க முடியும். இந்த நடவடிக்கை மூலம் ரூபாய் மதிப்பையும் சரிவடையாமல் கட்டுப்படுத்தவும் முடியும். ஆனால் தற்போதைய பிரச்சனை ஈரான் போரும், கச்சா எண்ணெய் விலையும் தான். சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 95 டாலராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
டாலர் முதலீடுகளை ஈர்க்க ஆர்பிஐ கொடுத்த தளர்வு காலம் முடிந்த நிலையில் வங்கிகள் FCNR-B வைப்பு நிதி மீதான வட்டியை 3.10 சதவீதம் வரையில் குறைத்துள்ளது. இதேபோல் சலுகை விலையில் முதலீடு செய்யும் வாய்ப்பையும் ஆகஸ்ட் 31ஆம் தேதி உடன் முடியதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

