டெல்லி: முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஆன ரகுராம் ராஜன் வரும் ஆண்டில் 5% வளர்ச்சியினை எட்டினால் நாம் அதிர்ஷ்டசாலிகள் தான் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஆண்டை காட்டிலும், அடுத்த ஆண்டு மிக கடினமானதாக இருக்கும் என்றும் ரகுராம் ராஜன், ரஷ்யா உக்ரைன் இடையே நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் மோசமான நிலை இருந்து வருகின்றது.
பாரத் ஜடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் கலந்து கொண்ட ரகுராம் ராஜன், பொருளாதாரம் மெதுவான வேகத்தில் இருந்து வருகின்றது. ஆனால் வட்டி விகிதம் அதிகரித்து வருகின்றது. இதனால் நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என கூறியுள்ளார். ஏன் இப்படி கூறினார்? என்ன காரணம்? கவனிக்க வேண்டியது என்ன வாருங்கள் பார்க்கலாம்.
மெதுவான வளர்ச்சி
ஏற்கனவே கொரோனா காரணமாக மோசமான சரிவினைக் கண்டுள்ள நிலையில், தற்போது நிலவி வரும் போர் பதற்றங்கள் உள்ளிட்ட பல பிரச்சனைகள் காரணமாக, பொருளாதாரம் இன்னும் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளது. உலகம் முழுக்க வளர்ச்சி மெதுவான வேகத்தில் இருந்து வருகின்றது. இது மக்களின் வாழ்வாதரத்தினை பாதிக்கலாம்.
இது மிகப்பெரிய பிரச்சனை
இது மிகப்பெரிய பிரச்சனை. இது தொழிற்துறை சார்ந்தது அல்ல. கொரோனா காலத்திலேயே ஏழைகள் மேலும் ஏழையாகியுள்ளனர். தொழிற்சாலைகள் மூடப்பட்டன. மேல்தட்டு மக்கள் வளர்ந்துள்ளனர். தொற்று நோய் காலத்தில் இது இடைவெளியானது அதிகரித்துள்ளது. ஏழைகள் ரேஷனை பெறலாம். அதேசமயம் பணக்காரர்கள் எந்த சவால்களையும் அனுபவிக்கவில்லை.
பல சவால்கள்
ஆனால் நடுத்தர மக்களோ பல சவால்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. பலரும் வேலையிழந்தனர். தங்களது வாழ்வாதாரத்தினை இழந்தனர். கடனால் தத்தளித்தனர். மொத்தத்தில் பல காரணிகளால் பிரச்சனைகளை எதிர்கொண்டனர்.
இந்தியாவுக்கும் பிரச்சனை தான்
இந்தியாவும் சிக்கலை எதிர்கொள்ளலாம். இந்தியாவில் வட்டி விகிதமானது அதிகரித்து வருகின்றது. அதேசமயம் ஏற்றுமதி விகிதமானது சரிவினைக் கண்டுள்ளது. இந்தியாவில் சில கமாடிட்டிகளின் பணவீக்க பிரச்சனையும் இருந்து வருகின்றது. காய்கறிகளின் விலை உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
பிரச்சனை அதிகரிப்பு
உண்மையில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்யில் உலக நாடுகள் பலவும் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றன. இது மேற்கொண்டு தாக்கத்தினை இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். மேலும் நிலவி வரும் அரசியலல் பதற்றங்கள் என்பது இன்று வரையில் முடிவடைந்ததாகவும் இல்லை. மாறாக நாளுக்கு நாள் இன்னும் பிரச்சனையானது அதிகரித்து கொண்டு தான் செல்கின்றது.
இதுவே பெரும் தடை
ஒரு மத்திய வங்கிகள் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர வட்டி விகித்தத்தினை தொடர்ந்து பல முறை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பணவீக்கம் குறையலாம் என்றாலும், அரசுகள் எதிர்பார்த்த அளவு அல்லது இலக்கினை எட்ட இன்னும் நீண்டதூரம் செல்ல வேண்டியுள்ளது. ஆக இதுவே பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய மிகப்பெரிய தடையாக இருந்து வருகின்றது.
அதிர்ஷ்டசாலி தான்
இந்த நிலையில் வளர்ச்சி என்பதே பெரும் கேள்வியாகத் தான் உள்ளது. பல சர்வதேச நாடுகளும் ரெசசனை எட்டலாம் என நிபுணர்கள் கணித்து வருகின்றனர். ஆக அதனுடன் ஒப்பிடும்போது இந்தியா உண்மையில் 5% எட்டினால் அதிர்ஷ்டசாலியாகத் தான் இருக்க முடியும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications