பணவீக்கம் தான் RBI-க்கு பெரிய தலைவலி.. சக்திகாந்த தாஸ் பரபர கருத்து!

உலகளாவிய வங்கி நெருக்கடிக்கு பிறகு வளர்ச்சி அல்லது நிதி ஸ்திரத்தன்மைக்கு ஏற்படும் ஆபத்துகள் பற்றிய கவலைகள் என்பது அதிகம் இல்லை. எனினும் இந்தியாவில் இந்திய ரிசர்வ் வங்கிக்கு தொடர்ந்து பணவீக்கமே பெரும் தலைவலியாக மாறி வருகின்றது என கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றும் நாளையும் தொடர்ந்து நடக்கவிருக்கும் மத்திய வங்கி கூட்டத்தில், வட்டி விகிதங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளனர்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

சில்லறை பணவீக்கம் மற்றும் நுகர்வோர் விலை குறியீடானது சற்றே சரிவில் காணப்படும் நிலையில், வட்டி அதிகரிப்பு இருக்குமா? சர்வதேச அளவில் பொருளாதாரம் சிக்கலில் இருந்து வரும் நிலையில் மத்திய வங்கியானது என்ன முடிவு எடுக்கப் போகிறது என முக்கிய எதிர்பார்ப்பாக சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ளது.

இப்படியும் இருக்கலாம்?

இப்படியும் இருக்கலாம்?

மத்திய வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் என்பது 25 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு, 6.75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி அதிகரிப்பு என்பது தொடர்ந்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

6% மேலாக பணவீக்கம்

6% மேலாக பணவீக்கம்

பிப்ரவரி மாதத்தில் உள்ள நுகர்வோர் குறியீடானது, பணவீக்க பட்டியலில் உள்ள 25 பொருட்களில் 10 பொருட்கள், கடந்த ஆண்டினை காட்டிலும் 6% அதிகமாக காணப்படுகிறது. இது தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் இலக்கிற்கு மேலாக காணப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் இலக்கான 4% மேலாக கூடுதலாக 2%மும், குறைவாக 2% இருக்க வேண்டும்.

என்னென்ன பொருட்கள்?

என்னென்ன பொருட்கள்?

தானியங்கள், பால், பழங்கள், ப்ரீபெய்ட் உணவுகள், ஆடைகள், பாதணிகள், வீட்டு பொருட்கள், சுகாதாரம் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் ஆகியவை 6% மேலாக பணவீக்கத்தினை கொண்டுள்ளன.

ரஷ்யா உக்ரைன் பிரச்சனைக்கு பிறகு தானியங்கள் விலை அதிகரிப்பு என்பது உச்சத்தில் காணப்படுகிறது. தீவன விலை உயர்வால், பால் விலையும் உயர்ந்து வருகின்றது.

 ரிசர்வ் வங்கி கண்காணிக்கும்

ரிசர்வ் வங்கி கண்காணிக்கும்

பணவீக்கத்தினை குறிகாட்டும் முக்கிய கூறுகள் 6% கீழாக வீழ்ச்சியடையும் போது மட்டுமே நிலையான பணவீக்கத்தினை எதிர்பார்க்க முடியும். ஆக விலை உயர்வு இருந்து வரும் இந்த நிலையில் ரிசர்வ் வங்கி நீண்டகால போக்கினை உன்னிப்பாக கவனிக்கலாம்.

ஏற்கனவே மே மாதம் முதல் ரெப்போ விகிதம் 250 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 6.50% ஆக அதிகரித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+