ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிமுகம் செய்த அரசு பத்திரத்தில் ரீடைல் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் திட்டத்தில் சுமார் 32,000 பேர் ரிஜிஸ்டர் செய்துள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கி பங்குச்சந்தையில் ரீடைல் முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்வது போல் அரசு பத்திரத்திலும் முதலீடு செய்ய அனுமதி அளிக்க முடிவு செய்தது.
இதன் மூலம் அரசும் எளிதாக முதலீட்டை திரட்ட முடியும் என்பதோடு, முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான மற்றொரு முதலீட்டு தளமும் கிடைக்கும். இதற்காக ரிசர்வ் வங்கி கடந்த வாரம் ரீடைல் டைரெக்ட் ஸ்கீம் என்ற திட்டத்தை பிரதமர் மோடி கையால் துவங்கி வைத்தது.
ரீடைல் டைரெக்ட் ஸ்கீம்
ரிசர்வ் வங்கி உருவாக்கிய ரீடைல் டைரெக்ட் ஸ்கீம் என்ற திட்டத்தின் கீழ் அரசு வெளியிடும் பத்திகத்தில் நேரடியாக முதலீடு செய்ய சுமார் 32,000 ரீடைல் முதலீட்டாளர்கள் கடந்த 6 நாட்களில் ரிஜிஸ்ட்ரேஷன் செய்துள்ளனர். இது முதலீட்டாளர்கள் மத்தியிலான ஆர்வத்தை காட்டுவதோடு இதுவரை நிறுவன முதலீட்டாளர்களுக்கு மட்டுமே இருந்த மோனோபோலி ஆதிக்கத்தை உடைக்கப்பட உள்ளது.
பத்திர விலையும், வட்டி விகிதமும்
இதேவேளையில் பத்திர விலையும், ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதமும் எதிர் திசையில் பயணிக்கும் என்பதால், முதலீட்டு வல்லுனர்கள் ரீடைல் முதலீட்டாளர்கள் சரியாக கணக்கிட்டு அதன்பின்பு முதலீடு செய்ய கோரிக்கை வைத்துள்ளது. அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிலிட் கணக்கு
ரிசர்வ் வங்கி ரீடைஸ் டைரெக்ட் திட்டத்திற்காக அரசு பத்திரங்களை வாங்கவும், விற்கவும் https://www.rbiretaildirect.org.in/ என்ற வெப்சைட் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தத் தளம் மூலம் முதலீட்டாளர்கள் ப்ரைமரி மற்றும் செக்ன்டரி தளத்தில் அரசு பத்திரங்களை வாங்க ரிசர்வ் வங்கியிடம் Retail Direct Gilt (RDG) Account-ஐ திறக்க வேண்டும்.
எப்படி கணக்கை துவங்குவது
ரிசர்வ் வங்கியின் இப்புதிய முதலீட்டுத் திட்டத்தின் வாயிலாக முதலீடு செய்ய வேண்டும் என நீங்கள் விரும்பினால் https://www.rbiretaildirect.org.in/ அல்லது https://rbiretaildirect.in/#/rdg-account-registration இணையப் பக்கத்தில் சென்று ஆன்லைன் வாயிலாகவே கணக்கைத் திறந்து முதலீடு செய்யலாம். மொபைல் எண் மற்றும் ஈமெயின் பதிவு செய்யப்பட்ட பின்பு கணத்தின் விபரங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.


Click it and Unblock the Notifications