இந்திய மக்கள் மறக்க முடியாத 2016 பணமதிப்புழப்பு நடவடிக்கை மூலம் நடுத்தர மக்களும், சிறு வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டது யாராலும் மறக்க முடியாது, இந்த நடவடிக்கையால் ஏற்பட்ட பதற்றம், பாதிப்பு தனியவே பல மாதங்களானது.
இந்த நிலையில் கிட்டத்தட்ட இதேபோன்ற அறிவிப்பை ஆர்பிஐ வெள்ளிக்கிழமை ஆர்பிஐ வெளியிட்டது, 2000 ரூபாய் நோட்டுகளை மொத்தமாக திரும்ப பெற முடிவு செய்து செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் மக்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அவகாசம் கொடுத்துள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கும், தற்போதைய அறிவிப்புக்கும் முக்கியமான வித்தியாசமே, 2016ல் அறிவிப்பு வெளியான அன்றே 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் ஆர்பிஐ 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தாலும் செல்லாது என இதுவரையில் அறிவிக்கவில்லை.
ஆர்பிஐ, மத்திய அரசின் கூட்டு முடிவாக இருந்தாலும் இந்த முறை ஆர்பிஐ 2000 ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பு மூலம் இந்தியா முழுவதும் இருக்கும் சிறு வரத்தகர்கள், ரீடைல் விற்பனையாளர்கள் தங்களுடைய வர்த்தகம் அதிகமாகும் என நம்புகின்றனர்.
2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறும் காரணத்தால் மக்கள் செலவு செய்யவே அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். இதனால் மக்கள் மத்தியில் பொருட்களை வாங்கும் அளவு பெரிய அளவில் அதிகரிக்க உள்ளது என நம்பப்படுவதால் இது ரீடைல் சந்தைக்கு 2016 போல் அல்லாமல் ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது.
இதேபோல் ஆர்பிஐ-யின் இந்த அறிவிப்பால் அதிகம் பாதிக்கப்பட போவது பெரிய விற்பனையாளர்களும், அதிகளவில் 2000 ரூபாய் நோட்டுகளை வைத்துள்ளவர்களும் தான் என Confederation of All in India Traders (CAIT) அமைப்பு தெரிவித்துள்ளது.
இதோடு ரீடைல் அசோசியேஷன் ஆப் இந்தியா அமைப்பின் சிஇஓ குமார் ராஜகோபாலன் பிஸ்னஸ் டுடே பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில் 2016 பணமதிப்பிழப்பு போல் இல்லாமல், நிதி பரிமாற்றத்தில் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் இருக்காது, காரணம் ஆர்பிஐ செப்டம்பர் 30 வரையில் கால அவகாசம் கொடுத்துள்ளது.

இதனால் பெரும்பாலான ரீடைல் விற்பனையாளர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிகிறது. ஆனால் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பின்பு 2000 ரூபாய் நோட்டுகளின் நிலை என்ன என்ற கேள்வி எல்லோரிடமும் உள்ளது. மேலும் ரீடைல் வர்த்தகங்களின் பணம் அடிப்படையிலான வர்த்தகம் கடந்த சில வருடத்தில் பெரிய அளவில் குறைந்துள்ளது. மொத்த டர்ன்ஓவரில் 25 முதல் 40 சதவீதம் மட்டுமே பணம் அடிப்படையிலான வர்த்தகம் நடக்கிறது என தெரிவித்துள்ளார்.
இதனால் பணப்புழக்கத்தில் 10.8 சதவீதம் மட்டுமே இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவது மூலம் பெரிய பாதிப்பு இருக்காது என அனைத்து வர்த்தகம் மற்றும் ரீடைல் அமைப்புகள் கூறுகிறது.


Click it and Unblock the Notifications