வங்கி மோசடிகள் இருமடங்கு அதிகரிப்பு.. ஒரே நிதியாண்டில் ரூ.1.85 டிரில்லியன் வங்கி மோசடி..!

மும்பை: கடந்த 2020ம் நிதியாண்டில் ஒரு லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாயாக வங்கி மோசடிகள் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தரவுகள் கூறுகின்றது.

இந்த காலகட்டத்தில் இதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கை 28 சதவீத வழக்குகள் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கை வெளியாகியுள்ளது.

 வங்கி மோசடிகள் இருமடங்கு அதிகரிப்பு..  ஒரே நிதியாண்டில் ரூ.1.85 டிரில்லியன் வங்கி மோசடி..!

இது வங்கியில் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் ஏற்பட்ட மோசடிகளின் மதிப்பாகும். எவ்வாறயினும் இந்த மோசடிகள் பல முந்தைய ஆண்டுகளில் பரவியுள்ளது. அவை அறிக்கையிடப்பட்ட நிதியாண்டில் கணக்கிடப்படுகின்றன. இந்த மோசடிகளில் பல வங்கிகளில் பெறப்பட்ட கடனில் உள்ளது. அவற்றை எண்ணிக்கை மற்றும் மதிப்பிலும் உள்ளதை இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

இதில் 2019 - 20ம் நிதியாண்டில் மோசடிகளாக அறிவிக்கப்பட்ட மொத்த மோசடிகளில், முதல் 50 கடன் மதிப்பானது மொத்த மதிப்பில் 76% ஆகும். இந்த மோசடிகள் பொதுத்துறை வங்கிகளில் 80% ஆக உள்ள நிலையில் அதன் மதிப்பு, 1.85 டிரில்லியன் டாலராகும். இதே தனியார் துறை வங்கிகளில் 18% ஆகவும் உள்ளது.

இவ்வாறு மோசடி செய்யப்பட்டதில் 98% வங்கிக் கடன்களாக உள்ளது. இதன் மதிப்பு 1.82 டிரில்லியன் டாலராகும். ஒரு கணக்கு மோசடி என அறிவிக்கப்பட்ட உடன், வங்கிகள் நிலுவையில் கடன்களில் 100% ரிசர்வ் வங்கியின் விதிகளின் படி, ஒரே நேரத்தில் அல்லது நான்கு காலாண்டுகளுக்கு மேல் ஒதுக்க வேண்டும். ஒரு மோசடி நிகழ்விற்கும், அதன் அறிக்கையிடலுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க மத்திய வங்கி முயற்சித்து வருகிறது.

மோசடிகள் நடந்த தேதிக்கும் வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களால் அவை கண்டறியப்படுபவதற்கும், இடையிலான சராசரி பின்னடைவு 2019 - 20ம் நிதியாண்டில் 24 மாதங்கள் ஆகும். இருப்பினும் தாமதமானது 100 கோடி ரூபாய் மற்றும் அதற்கும் மேற்பட்ட பெரிய மோசடிகளுக்கு சராசரியாக 63 மாதங்கள் தாமதமாக இருந்தது.

இருப்பினும் வங்கிகள் கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது ஜூன் 2021ம் காலாண்டில் மோசடிகள் சற்று குறைந்துள்ளன. இது ஏப்ரல் - ஜூன் 2020 காலாண்டில் 28,843 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதுவே ஏப்ரல் - ஜூன் 2019ல் 42,228 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+