மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுகளில் சுமார் 97.38 சதவீத வங்கி அமைப்பிற்குள் திரும்பி விட்டன. மக்கள் வசம் இன்னும் ரூ.9330 கோடி மதிப்பிலான ரூ.2000 நோட்டுகள் உள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2023 மே 19 ஆம் தேதியன்று புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளைத் திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. அன்றைய தினம் புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடியாகும். அது இப்போது ரூ.9330 கோடியாகக் குறைந்துவிட்டது.

ரூ.2000 நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தங்களிடமுள்ள ரூ.2000 நோட்டுகளை நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளைகளில் அவற்றை டெபாசிட் செய்யலாம் அல்லது பணத்தை மாற்றிக் கொள்ளலாம்.
இத்துடன் இந்தியா போஸ்ட் மூலம் ரிசர்வ் வங்கிக் கிளைகளுக்கு தபால் மூலமும் அனுப்பி தங்களது வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.
2000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்களோ அல்லது நிறுவனங்களோ செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் டெபாசிட் செய்யவோ அல்லது பணமாக மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் அதற்கான அவகாசம் அக்டோபர் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் வங்கிகளில் மாற்றுவது அல்லது டெபாசிட் செய்யும் வசதி ரத்து செய்யப்பட்டது.
அக்டோபர் 8 ஆம் தேதி முதல் அந்த 2000 ரூபாய் நோட்டை நாட்டில் உள்ள 19 ரிசர்வ் வங்கி கிளை அலுவலகத்தில் நேரடியாக மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இந்த வேலையைச் செய்ய வேண்டியிருந்ததால் இப்போது கூடுதலாக இந்தியா போஸ்ட் மூலம் தபாலில் அனுப்பும வசதியை ரிசர்வ் வங்கி செய்துள்ளது.
ஆமதாபாத், பெங்களூரு, பேலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டீகர், சென்னை, குவாஹட்டி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னௌ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பாட்னா, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் வங்கி நோட்டுகளில் டெபாசிட் செய்யவோ/மாற்றவோ செய்யலாம்.
பழைய 500 ரூபாய் நோட்டுகள், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு திடீரென அறிவித்தது. இதைத் தொடர்ந்து புதிய 500 ரூபாய் நோட்டுகளும், 2000 ரூபாய் நோட்டுகளும் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது. இந்த நிலையில் புதிய 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்து அதைத் திரும்பப் பெற்று வருகிறது.
கிட்டத்தட்ட ரூ.3.65 மதிப்பிலான 2000 நோட்டுகளை புதிதாக ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டிருந்தது. இப்போது அதில் 97.38 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்ப வந்துவிட்டன. மக்கள் வசம் வெறும் ரூ.9330 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications