ரிசர்வ் வங்கி ஜூன் 27ஆம் தேதி வெளியிட்டநாட்டின் நிதி ஸ்திரத்தன் அறிக்கை வெளியிட்டது, இதில் இந்தியப் பொருளாதாரமும், நிதி அமைப்பும் வலுவாக, சிறப்பாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த அறிக்கையில், வங்கிகளின் மொத்த வாராக் கடன் சொத்து மதிப்பு (Gross Non-Performing Assets - GNPA) 12 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் ஜூன் மாத அறிக்கையின்படி, மார்ச் 2024 ம் ஆண்டு இறுதி நிலவரப்படி, வங்கிகளின் மொத்த வாராக் கடன் சொத்து அளவீடு (GNPA) 12 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்து 2.8 சதவீதமாக உள்ளது.

மேலும், வணிக வங்கிகளின் மொத்த வாராக் கடன் சொத்து விகிதம் (Net Non-Performing Assets - NNPA) மார்ச் 2024 ம் ஆண்டு இறுதியில் 0.6 சதவீதமாகக் குறைந்துள்ளது என ஆர்பிஐ அறிவித்துள்எளது.
வணிக வங்கிகளின் சொத்துத் தரம் தொடர்ந்து மேம்பட்டுள்ளதாகுவம், அவற்றின் மொத்த இழப்பு சொத்து விகிதம் மார்ச் 2024 இல் 12 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
மேலும் ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, இந்தியாவில் இருக்கும் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் நிதி நிலைகள் மேம்பட்டுள்ளன. இதன் காரணமாக, வங்கிகள் தொடர்ந்து கடன் வழங்குவதன் மூலம், மொத்த பொருளாதார நடவடிக்கைகள் மேம்படும் என்பதை வெளிப்படையாக அறிவித்துள்ளது.
புவிசார் அரசியல் பிரச்சனைகள் இருந்தபோதிலும், உலக நிதி அமைப்பு ஸ்திரமாகவே உள்ளது என ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications