வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீதான புகார்கள் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி தனது வருடாந்திர அறிக்கையில், வங்கி குறை தீர்பாயத்திடம், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனத்தின் மீதான புகார்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 2019 - 20ம் நிதியாண்டில் வங்கிகளுக்கு எதிரான புகார்கள் 58% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
Array
2019 - 20ம் நிதியாண்டில் வங்கி மீது 3,08,630 புகார்களாக அதிகரித்துள்ளதாகவும், இது ஒரு வருடத்திற்கு முன்பு 1,95,901 புகார்களாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. இதே வங்கி அல்லாத நிறுவனங்கள் மீதான புகார்கள் 2019 - 20ம் நிதியாண்டில் 387% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து வங்கி குறை தீர்பாயத்திற்கு (Ombudman) இந்த நிதியாண்டில் 19,432 புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதே இதற்கு முந்தைய ஆண்டில் வெறும் 3,991 புகார்கள் மட்டுமே வந்திருந்ததாகவும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. .
டிஜிட்டல் மீதான பரிவர்த்தனை
இந்த புகார்களில் பெரும்பாலும் டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான புகார்களாக இருந்ததாக ஒம்பட்ஸ்மேன் கூறியுள்ளது. இது பெறப்பட்ட மொத்த புகார்களில் 44.66% பங்கு வகித்துள்ளது. முந்தைய ஆண்டுகளில் வங்கிகள் மீதான புகார்கள் அதிகரித்திருந்த நிலையில், தற்போது வங்கி அல்லாத நிதி நிறுவனத்தின் மீதான புகார்கள் அதிகரித்துள்ளன.
வங்கிகள் மீது புகார்
குறிப்பாக வங்கிகளில் மிகப்பெரிய முன்னணி வங்கிகள் மீதே அதிக புகார்கள் இருந்தன. இதில் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மீது தான் 48,333 புகார்கள் வந்துள்ளன. இதனையடுத்து தனியார் துறையை சேர்ந்த ஹெச்டிஎஃப்சி வங்கி மீது 15,004 புகார்களும், ஐசிஐசிஐ வங்கி மீது 11,844 புகார்களும், இதே ஆக்ஸிஸ் வங்கி மீது 10,457 புகார்களும், இதே பஞ்சாப் நேஷனல் வங்கி மீது 9,928 புகார்களும் வந்துள்ளதாக இவ்வங்கி தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ மீது புகார்
இதில் மொத்த புகார்களில் எஸ்பிஐ மீது 2018 - 19ம் ஆண்டில் 61.90% புகார்கள் இருந்த நிலையில், 2019 - 20ம் வருடத்தில் 59.65% வந்துள்ளது. இதே மொத்த புகார்களில் தனியார் வங்கிகள் மீதான புகார்கள் 28.04%ல் இருந்து 31.96% ஆக அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மீதும் அதிக எண்ணிக்கையிலான புகார்கள் FBC பின்பற்றாதது தான் (32.29% புகார்கள்) என்றும், இதே ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்றாதது என்று 18.565 புகார்களும் வந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கைகள் சுட்டிக் காட்டியுள்ளன.
வங்கி அல்லாத நிதி நிறுவனம் மீது புகார்
இதே வங்கி அல்லாத நிதி நிறுவனத்தில் பஜாஜ் நிதி நிறுவனத்திற்கு எதிராக 4979 புகார்கள் வந்துள்ளதாகவும், இதே 1968 புகார்கள் பராமரிக்கதக்கவை என்றும் கூறியுள்ளது. இதனையடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியாபுல்ஸ் கன்சியூமர் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மீது 300 புகார்களும், இதனை தொடர்ந்து HDB பைனான்ஷியல் லிமிடெட் நிறுவனத்தின் மீது 252 புகார்களும், டாடா கேப்பிட்டல் பைனான்ஷியல் நிறுவனத்தின் மீது 217 புகார்களும் வந்துள்ளன. இதே புல்லர்டன் இந்தியா கிரெடிட் கம்பெனி லிமிடெட் மீது 235 புகார்களும் வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!



Click it and Unblock the Notifications