இந்திய பொருளாதாரம் தடாலடியாக உயரும்.. ரிசர்வ் வங்கி கணிப்பால் புதிய நம்பிக்கை..!

இந்தியாவில் லாக்டவுன் கட்டுப்பாட்டால் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பில் இருந்து முழுமையாக மீள முடியாமல் இந்தியப் பொருளாதாரம் தவித்து வரும் நிலையில் ரிசர்வ் வங்கியின் கணிப்புகள் முதலீட்டாளர்களுக்கும், மக்களுக்கும் புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

2022-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்-ஐ வெளியிட இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ரிசர்வ் வங்கி கணிப்புகள் முதலீட்டுச் சந்தை மட்டும் அல்லாமல் லாக்டவுன் வேலைவாய்ப்பை இழந்த கோடிக்கணக்கான மக்களுக்குத் திரும்பவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையும் கிடைத்துள்ளது.

V வடிவிலான வளர்ச்சி

V வடிவிலான வளர்ச்சி

இந்தியாவில் அடுத்த சில மாதங்களுக்குப் பணவீக்கம் கட்டுப்பாட்டிலும், தற்போது இருக்கும் வர்த்தகம் வளர்ச்சி தொடர்ந்தால் நாட்டின் பொருளாதாரம் V வடிவிலான தடாலடி வளர்ச்சியைப் பதிவு செய்ய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. இதுமட்டும் அல்லாமல் பட்ஜெட் கொள்கையிலும் மறுசீரமைப்பு செய்யும் வாய்ப்பையும், வளர்ச்சிக்கான ஆதாரத்தை அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

பணப்புழக்கம்

பணப்புழக்கம்

இந்தியாவில் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருந்த நிலையில் ரிசர்வ் வங்கி நாட்டில் பணவீக்கத்தை அதிகரிக்க அதிகளவிலான நிதியை உட்செலுத்தியது. தற்போது இந்தப் பணப்புழக்கத்தைக் குறைத்து நிலையான அளவீட்டில் வைக்கும் பணிகளைச் செய்து வருகிறது. இதற்கான ஆய்வுகளைச் செய்யும் போது தான் ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜிடிபி வளர்ச்சி

ஜிடிபி வளர்ச்சி

சமீபத்தில் இந்தியாவில் மேக்ரோ-எக்னாமிக் பிரிவு பெரிய அளவிலான வர்த்தகத்தையும் வளர்ச்சியையும் உருவாக்கியுள்ளது. இதனால் சரிவில் இருந்து இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி அடையத் துவங்கியுள்ளது. இதேபோல் இந்த வளர்ச்சி காரணியால் நாட்டின் பணவீக்கம் பெரிய அளவிலான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பொருளாதாரம்

இந்தியப் பொருளாதாரம்


தற்போதைய வளர்ச்சிப் பாதை அடுத்த சில காலாண்டுகளுக்குத் தொடர்ந்தால் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் பொருளாதார வளர்ச்சி திட்டம் பெரிய அளவிலான லாபத்தையும் வளர்ச்சியையும் அளிக்கும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மார்ச்-க்கு வளர்ச்சி

மார்ச்-க்கு வளர்ச்சி

மேலும் இந்தியப் பொருளாதாரம் 2020-21ஆம் நிதியாண்டில் ஏற்பட்ட சரிவை 2வது அரையாண்டில் பெரிய அளவில் மீண்டு உள்ளது. இதுமட்டும் அல்லாமல் நாட்டின் பொருளாதாரம் நெருக்கடி வருகிற மார்ச் மாதத்துடன் முடிவடைந்து, இந்தியப் பொருளாதாரம் எதிர்மறை வளர்ச்சியில் இருந்து நேர்மறை வளர்ச்சிக்குச் செல்லும் என்ற கணிப்பும் வெளியாகியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+