இந்திய ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் 6ஆம் தேதி தனது இரு மாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை வெளியிட உள்ள நிலையில், ரெப்போ விகிதம் குறித்து MPC குழு எத்தகைய முடிவுகளை எடுக்கும் என்பது குறித்து குட்ரிட்டன்ஸ் தளம் பிரத்தியேக கருத்து கணிப்பு நடத்தியுள்ளது.
இக்கூட்டத்தின் நாணய கொள்கை முடிவுகளில் ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லாமல், பழைய வட்டி விகிதங்களையே தொடரும் என்று 62 பொருளாதார நிபுணர்களை உள்ளடக்கிய GoodReturns-ன் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

இந்த கணிப்பில் பெரும்பாலான நிபுணர்கள் RBI-யின் நடுநிலை நிலைப்பாட்டை (Neutral stance) கடைப்படிக்கும் எதிர்பார்க்கின்றனர், இதனால் ரெப்போ விகிதத்தை 5.5% அளவில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் நிலையாக வைத்திருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
ரெப்போ விகிதம் மாற்றாமல் அறிவிக்கப்பட முக்கிய காரணமாக இருப்பது சமீபத்தில் சில்லறை பணவீக்கம் ஜனவரி 2019-இல் இருந்து குறைவான நிலைக்கு வந்திருந்தாலும், தற்போதைய பொருளாதார நிலையற்ற தன்மை RBI கூர்ந்து கவனிப்பதாக தெரிகிறது.
ரிசர்வ் வங்கி கடந்த நான்கு கொள்கை கூட்டங்களில் பெரிய அளவிலான வட்டி விகித குறைப்புகளையும், நாணய கொள்கை தளர்வுகளுக்கும் முன்னுரிமை கொடுத்தால், தற்போதைய பொருளாதார நிலைக்கு போதுமான பணபுழக்கம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
BofA Securities-ன் இந்தியா மற்றும் ASEAN பொருளாதார ஆராய்ச்சி தலைவர் ராகுல் பஜோரியா கூறுகையில், "இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகள் குறித்த எங்களுடைய கணிப்பில் நாங்கள் 5.50% விகிதத்தை நிலையாக வைத்திருக்கும் என நம்புகிறோம். RBI தற்போதைய குறைப்புகள் மற்றும் நடவடிக்கைகளின் தாக்கத்தை கவனித்து வரும் காலத்தில் ரெப்போ விகிதம் குறித்த நிலைப்பாடுகளை தீர்மானிக்கும்" என்றார்.
இதற்கு முன், ஜூன் மாதத்தில் ரிசர்வ் வங்கி 50 அடிப்படை புள்ளிகள் விகிதத்தை குறைத்தது. மேலும், செப்டம்பர் முதல் டிசம்பர் 2025 வரையில் CRR விகிதம் 100 அடிப்படைப்புள்ளகள் குறைப்பு நடைபெற உள்ளது.
ஆகஸ்ட் 6, 2025 அன்று ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நிதி கொள்கை குழு (MPC) மாற்றமில்லாத நிலையை தொடரும் என்று 39 இல் இருந்து 62 நிபுணர்கள் GoodReturns-ன் கருத்துக் கணிப்பில் தங்களுடைய கணிப்பை வெளியிட்டு உள்ளனர்.
இக்கூட்டத்தில் ரெப்போ விகிதம் குறைக்கப்படாவிட்டால் வீட்டுக்கடன், வாகன கடன் வாங்கியவர்களுக்கு EMI குறையாது. இதேபோல் சில வங்கிகள் ஏற்கனவே ஆர்பிஐ கொடுத்த குறைப்புகளை முழுமையாக கொடுக்கவில்லை. இதனால் இக்கூட்டத்திற்கு பிறகு வங்கிகள் வட்டி குறைப்பை அறிவிக்கலாம்.


Click it and Unblock the Notifications