வீட்டுக் கடன், வாகன கடன், பர்சனல் லோன் EMI குறையப்போகுது.. யாருக்கு எவ்வளவு லாபம்..? - முழு விபரம்

ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று (டிசம்பர் 5, 2025) மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். ரெபோ வட்டி விகிதத்தை 5.50 சதவீதத்திலிருந்து 0.25 சதவீதம் குறைத்து 5.25 சதவீதமாக அறிவித்தார்.

இது 2025-26 நிதியாண்டில் நான்காவது வட்டி குறைப்பு ஆகும். இதுவரையில் மொத்தம் 125 பேசிக் பாயிண்ட் (1.25 சதவீதம்) குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி குறைப்பு சாதாரண மக்களின் வாழ்க்கையில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும். எப்படி என்று விரிவாகப் பார்ப்போம் வாங்க.

வீட்டுக் கடன், வாகன கடன், பர்சனல் லோன் EMI குறையப்போகுது.. யாருக்கு எவ்வளவு லாபம்..? - முழு விபரம்

வீட்டுக் கடன் EMI குறையும்
வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கும் வட்டி தான் ரெப்போ வட்டி. இந்த வட்டி குறைந்தால் வங்கிகளுக்கு குறைந்த வட்டியில் பணம் கிடைக்கும், இதனால் வணிக வங்கிகள் தனது வர்த்தகத்தை அதிகரிக்க குறைந்த வட்டியில் மக்களுக்கு கடன்களை அளிக்கும்.

இதனால் விரைவில் ஏற்கனவே வீட்டுக் கடன் வாங்கியோருக்கும், புதிதாக வீடு வாங்குவோருக்கும் ஹோம் லோன்-க்கான வட்டி 0.20 முதல் 0.40 சதவீதம் வரை குறைய வாய்ப்பு உள்ளது. இந்த அளவு ஒவ்வொரு வங்கிக்கும் மாறும்.

உதாரணம்: 50 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் 20 ஆண்டுக்கு 8.50% வட்டியில் எடுத்திருந்தால் மாதம் சுமார் ரூ.43,400 EMI செலுத்துவீர்கள். வட்டி 8.30% ஆக குறைந்தால் மாத ஈஎம்ஐ ரூ.42,400 ஆக குறையும். அதாவது மாதம் ரூ.1,000 சேமிப்பு கிடைக்கும்.

இதேபோல் புதிதாக வீடு வாங்க நினைப்பவர்களுக்கு வீட்டுக் கடன் எளிதாகவும், குறைந்த வட்டியிலும் கிடைக்கும், இதனால் EMI சுமையும் குறையும்.

கார் லோன், பைக் லோன்
கார், பைக் கடன்களும் பெரும்பாலும் ரெப்போ வட்டியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இப்போது வங்கிகள் வட்டியைக் குறைத்தால் 5-7 ஆண்டு கார் கடனில் மாதம் ரூ.300 முதல் ரூ.800 வரை EMI குறையும்.

ஆனால் நீங்கள் வாங்கிய கார் லோன், பைக் லோன் Floating Rates அடிப்படையில் இருந்தால் மட்டுமே வட்டி விகிதம் குறையும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதேபோல் புதிதாக கார் லோன், பைக் லோன் வாங்கினால் புதிய வட்டி விகிதத்தின் கீழ் குறைந்த வட்டியில் கடன் பெற முடியும்.

தனிநபர் கடன்
தனிநபர் கடனுக்கான வட்டி பொதுவாக 11-15% வரை இருக்கும். இப்போது ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை குறைத்த காரணத்தால் உடனடியாக பர்சனல் ஈஎம்ஐ-க்கான வட்டி விகிதம் குறையுமா என்றால் வாய்ப்புகள் குறைவு தான். காரணம் பெரும்பாலாந பர்சனல் லோன் Fixed-rate அடிப்படையில் வழங்கப்படுவதால் இதில் மாற்றம் இருக்காது.

ஆனால் புதிதாக வாங்கப்படும் பர்சனல் லோன்-க்கு ஆர்பிஐ அறிவிப்பு மூலம் வட்டி விகிதம் குறைக்கப்பட்டு குறைவான வட்டியில் வங்கிகள் கடன் அளிக்கும்.

யாருக்கு உடனடி லாபம்?
ஆர்பிஐ வட்டி குறைப்பால் உடனடியாகவும், விரைவாகவும் பலன் அடையப்போவது வீட்டுக் கடன் வைத்திருப்பவர்கள் தான். இவர்களுடைய கடன் தொகை பொறுத்து மாதம் ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை EMI குறையும்.

மற்ற கடன் வாங்கியோருக்கு Floating Rates அடிப்படையில் இருந்தால் மட்டுமே வட்டி விகிதம் குறையும். ஆனால் புதிதாக கடன் வாங்குவோருக்கு இந்த பலன்களை பெறலாம்.

எப்போது பலன் கிடைக்கும்?
பொதுவாக வங்கிகள் 1-2 மாதத்தில் புதிய வட்டியை அமல்படுத்தும். புதிய கடன் எடுப்பவர்கள் உடனடியாக குறைந்த வட்டியில் பயன் பெறலாம். இதுவும் வங்கிகள் அடிப்படையில் மாறுப்படும். ஹோம் லோன் வைத்துள்ளவர்கள் வங்கியை தொடர்பு கொண்டு எப்போது வட்டி விகிதம் குறைகிறது என்பதை தெரிந்துக்கொள்ளவும், அல்லது வட்டியை குறைப்பதற்கான செயல்முறையை தெரிந்துக்கொண்டு அதன் படி நடக்க குட்ரிட்டன்ஸ் தளம் அறிவுறுத்துகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+