டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 2016ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தது. அந்த காலகட்டத்தில் பணம் கையில் இருந்தும் பலரும் ஏழைகளாகவே இருந்தனர். கையில் பணமிருந்தாலும் தேவைக்கு செலவு செய்ய முடியாத நிலை இருந்தது.
கையில் பணம் இருந்தாலும் கூட அதனை செலவழிக்க முடியாமல் புதிய பணத்தை பெற, பல மணி நேரம் வங்கிகளில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அந்த சமயத்தில் 500 ரூபாய் மற்றும் 1000 மதிப்புள்ள நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன. 2000 ருபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
அச்சிடுவது நிறுத்தம்
எனினும் பல்வேறு காரணங்களாக கடந்த 3 வருடங்காளாகவே 2000 ரூபாய் தாள்கள் அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது மிக உயர்மதிப்புள்ள தாளாக இருப்பதால் பயங்கரவாதத்திற்கும் நிதி உதவி அளிக்கவும், போதை பொருட்கள் கடத்தவும், கறுப்பு பணமாகவும் பதுக்க பயன்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பல்வேறு நாடுகளும் தடை
பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்ட நாடுகள் பலவும் இவ்வாறு உயர் மதிப்புடைய தாள்களை குறிப்பிட்ட காலத்தில் தடை செய்துள்ளன, குறிப்பாக அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கூட 100-க்கு மேல் மதிப்புடைய தங்களுடைய, உயர் மதிப்புடைய கரன்சிகளை தடை செய்துள்ளன.
இந்தியாவும் தடை செய்யுமா?
குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 2018ம் ஆண்டில் 500 யூரோ மதிப்புள்ள தாளை தடை செய்தது. சிங்கப்பூர் 10,000 டாலர் மதிப்புள்ள பணத்தாளை கடந்த 2010லியே நிறுத்தி விட்டது. அந்த வகையில் இந்தியாவில் உயர் மதிப்புடைய 2000 ரூபாய் தாளை இந்தியாவும் தடை செய்யுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சுஷில் மோடியின் கருத்து?
சட்டவிரோதமான நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தான் மேலை நாடுகள் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அந்த வகையில் இந்திய அரசும் 2000 ரூபாயினை தடை செய்வது பற்றி யோசிக்க வேண்டும். இந்த தடையை படிப்படியாக அமல்படுத்த வேண்டும். மக்கள் எந்த விதமான பிரச்சனையும் இன்றி மாற்றிக் கொள்ள முடியும் என்றும் பீஹாரின் முன்னாள் துணை முதல்வர் சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.
மக்கள் மத்தியிலும் அச்சம்
எனக்கு தெரிந்தவரை வங்கிகள் கூட அதிக அளவில் 2000 ரூபாய் நோட்டுகள் கொடுப்பதை நிறுத்தி விட்டன. ஏடிஎம்களிலும் கூட குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
மக்கள் மத்தியிலும் இது குறித்தான அச்சம் நிலவி வருகின்றது. எந்த நேரத்தில் எந்த அறிவிப்பு வருமோ? என்ற அச்சம் இருந்து வருகின்றது. மறுபடியும் நம் பணத்தை மாற்றி செலவு செய்ய பல மணி நேரம் காத்திருக்க வைக்காமல் அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications