இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா புதிய கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சர்ச்சைக்குரிய விதியாக, கட்டுமான செலவு அதிகரிப்பு ஏற்பட்டால், அதை கடன் பெறுபவர்கள் ஏற்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த விதிமுறை தொழில் துறையினரால் கடுமையாக எதிர்க்கப்பட்டு வரும் நிலையில், எஸ்பிஐ தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஸ்பிஐ வழங்கும் கடன் ஒப்பந்தத்தில் புதிய விதி இடம் பெற்றுள்ளது. இதன்படி, ரிசர்வ் வங்கி நிதிக்கட்டுப்பாடு விதிமுறைகளைக் கடுமையாக்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தினால், அதனால் ஏற்படும் கூடுதல் செலவுகளைக் கடன் பெறுபவர் ஏற்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், கடன் வழங்கப்பட்ட பிறகும், வட்டி விகிதத்தை உயர்த்தும் உரிமை எஸ்பிஐக்கு கிடைக்கும்.
மே மாத தொடக்கத்தில், ரிசர்வ் வங்கி இந்தியாவில் கட்டுமான திட்டங்களுக்கான கடன் வழங்குதல் மற்றும் கணக்கீடு முறைகள் குறித்த புதிய விதிமுறைகளை வெளியிட்டது. இதன்படி, கட்டுமான நிலையில் உள்ள உட்கட்டமைப்பு மற்றும் கமர்சியல் ரியல் எஸ்டேட் திட்டங்களின் கடன்களுக்கு 5% தொகையை ஒதுக்குமாறு (provisions) வங்கிகளுக்கு ஆர்பிஐ அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆர்பிஐ விதிமுறை அமலாக்கம் செய்யப்படும் பட்சத்தில் இப்பிரிவுக்கு அளிக்கப்படும் கடன் அளவுகள் பெரிய அளவில் குறையும், இதன் மூலம் நாட்டின் உள்கட்டமைப்பு துறையின் வளர்ச்சி அதிகளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு உள்ளது.
தற்போதைய நிலையில், கமர்சியல் ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கான கடன்களுக்கு 1%, குடியிருப்பு ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கான கடன்களுக்கு 0.75%, பிற கடன்களுக்கு (கட்டுமான நிதி உட்பட) 0.40% என வங்கிகள் பாதுகாப்பு நிதி ஒதுக்கப்படுகிறது அதாவது provisions. இந்த நிலையில் கட்டப்பட்டு வரும் திட்டங்களுக்கு அளிக்கப்பட்டு உள்ள கடன் தொகைக்கு 5 சதவீத பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டை அளித்துள்ளது.
எஸ்பிஐ உட்பட பல்வேறு வங்கிகள் மற்றும் நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதிமுறைகளைத் தளர்வு அளிக்கக் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதனால், உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களின் ஆர்வம் குறைந்துவிடும் என கவலையும் தெரிவித்துள்ளனர்.
எஸ்பிஐ தரப்பில் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, ரிசர்வ் வங்கி தனது புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்திவிட்டால், எஸ்பிஐ வங்கி ரூ. 9,000 கோடி கூடுதலாக ரிசர்வ் வங்கி-யின் பாதுகாப்பு நிதியாக ஒதுக்க வேண்டியிருக்கும். இது தற்போது ஒதுக்கப்படும் ரூ. 32,000 கோடியை விட 28% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications