டெல்லி: 2025ஆம் ஆண்டு வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு சிறந்த ஆண்டு என கூறலாம், ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகித குறைப்பால் வீட்டு கடன் , வாகன கடன் மற்றும் நகை கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதம் 1% வரை குறைந்திருக்கிறது. இதனால் ஆயிரக்கணக்கில் வட்டியில் சேமிக்க முடிந்திருக்கிறது.
1% வரை ரெப்போ வட்டி குறைப்பு: இந்திய ரிசர்வ் வங்கி பிப்ரவரி, ஏப்ரல் மற்றும் ஜூன் என மூன்று மாதங்களிலும் ரெப்போ வட்டி விகிதங்களை குறைத்தது. பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் தலா 25 அடிப்படை புள்ளிகள் என ரெப்போ வட்டியை குறைந்தது, ஜூன் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் 50 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்தது. இதன் மூலம் ரிசர்வ் வங்கி , மற்ற வங்ககளுக்கு வழங்கக்கூடிய கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5% இல் இருந்து 5.5% ஆக குறைந்துள்ளது.

வட்டி விகிதங்கள் குறைந்தன: ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து வங்கிகள் அனைத்தும் கடன்களுக்கான வட்டியை 1% வரை குறைத்துள்ளன. இது சாமானிய மக்களுக்கு பெருமளவில் பயன் தந்துள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் நடக்கும் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் மேலும் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஜூன் மாதத்திற்கான நாட்டின் பொருளாதார மதிப்பீட்டை வெளியிட்டு இருக்கக்கூடிய மத்திய நிதி அமைச்சகம், முக்கிய பணவீக்கம் தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.
குறைந்த பணவீக்கம்: ஒட்டுமொத்த பணவீக்கம் என்பது ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்த 4 சதவீதம் என்ற இலக்கை விட குறைவாகவே இருக்கிறது , என்பதால் இது மேற்கொண்டு வட்டி குறைப்புக்கான வாய்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளது. 2026 ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டில் முக்கிய பணவீக்கம் என்பது 3.4 சதவீதமாக இருக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி கணிப்பு வெளியிட்டு இருக்கிறது. 2026 ஆம் நிதி ஆண்டு முழுவதுமே நாட்டில் பணம் வீக்கம் விகிதம் என்பது 3.7 சதவீதமாக இருக்கும் என கணிப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

வட்டி குறைப்புக்கு சாதகமான சூழல்: தற்போதைக்கு நாட்டில் பொருட்கள் மீதான விலை அழுத்தங்கள் குறைந்து இருக்கின்றன , காய்கறிகளின் விலை சரிவடைந்து இருக்கிறது , இந்தியாவில் 2025 இல் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலாண்டில் சில்லறை பணவீக்கம் வெகுவாக குறைந்து இருக்கிறது, இதுதான் ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகித குறைப்புக்கு மிக முக்கிய காரணம் என நிதி அமைச்சகம் கூறுகிறது. நுகர்வோர் விலை குறியீட்டு பணவீக்கம் ஜனவரி மாதம் 4.31% ஆக இருந்து ஜூன் மாதத்தில் 2.10% என குறைந்திருக்கிறது. கடந்த 77 மாதங்களில் இல்லாத அளவு நுகர்வோர் விலை குறியீட்டு பணவீக்கம் குறைந்து இருக்கிறது.
ஆகஸ்டில் கூட்டம்: இவை அனைத்துமே மேற்கொண்டு வட்டி குறைப்புக்கான ஒரு சாதகமான சூழலை உருவாக்கி இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் சுட்டிக்காட்டுகிறது. ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கி கூட்டம் மும்பையில் நடக்கிறது. இதில் வட்டி குறைப்பு என்ற தகவல் வந்தால் லட்சக்கணக்கான இந்தியர்கள் நிம்மதி அடைவார்கள்.
More From GoodReturns

Gold loan: ஆர்பிஐ கொண்டு வந்துள்ள ”7 நாட்கள்” விதி!! தங்க நகை கடன் வாங்குவோருக்கு மேஜர் அப்டேட்!!

வீட்டு கடன், வாகன கடன் வட்டி குறையுமா? மும்பையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தீவிர ஆலோசனை..!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications