ரிசர்வ் வங்கியின் இரு மாத நாணய கொள்கை கூட்டம் பிப்ரவரி 6 ஆம் தேதி துவங்கிய நிலையில் இன்று கூட்டத்தின் முடிவுகளை ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டார்.
இதனால் இன்று ரிசர்வ் வங்கியின் இரு மாத நாணய கொள்கை முடிவில் வட்டி உயர்வுக்கு 50:50 சான்ஸ் இருக்கும் எனக் கணிக்கப்பட்டு இருந்த நிலையில் ரெப்போ விகிதம் உயர்ந்துள்ளது.
இதனுடன் ஆர்பிஐ 2 முக்கியமான திட்டத்தை இன்று அறிவித்துள்ளது.
பணப் புழக்கம்
இந்தியாவில் பணப் புழக்கத்தை மேம்படுத்த ஆர்பிஐ பல முயற்சிகளைச் செய்து வரும் வேலையில், தற்போது மக்கள் மத்தியில் இருக்கும் நாணயம் அதாவது சில்லறைக் காசுகளுக்கான தட்டுப்பாட்டைப் போக்க முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
யுபிஐ சேவை
இந்தியா முழுவதும் யுபிஐ சேவை அறிமுகம் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டு வரும் வேளையில் ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு வரலாற்று முதல் முறையாகச் சில மாதங்களுக்குக் குறைந்தது. பணம் தான் எப்போது கிங் ஆக இருந்தாலும், நாளிடைவில் இது கட்டாயம் மாறும்.
சில்லறை காசு தட்டுப்பாடு
இந்த நிலையில் மக்கள் மத்தியில் இருக்கும் சில்லறை காசுகளுக்கான தட்டுப்பாட்டைப் போக்க ஆர்பிஐ நாட்டின் 12 நகரங்களில் நாணயங்களைப் புழக்கத்திற்குக் கொண்டு வரும் காயின் வென்டிங் மெஷின்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பைலட் திட்டம்
இந்தக் காயின் வென்டிங் மெஷின்களின் அறிமுகம் ஒரு பைலட் திட்டமாக அறிமுகம் செய்யப்பட்டு, இதில் முயற்சியில் ஏற்படும் பிரச்சனைகளைச் சரி செய்து இந்தியா முழுக்க விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. ஏடிஎம் இயந்திரத்தை போலவே இயங்கும் இந்தக் காயின் வென்டிங் மெஷின்.
QR Code வசதி
காயின் வென்டிங் மெஷின்களைப் பயன்படுத்த ஏடிஎம் கார்டு அல்லாமல் QR Code வாயிலாக மக்கள் சில்லறை காசுகளைப் பெற முடியும். அதாவது நீங்கள் தேர்வு செய்யும் தொகைக்கு உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் டெபிட் செய்யப்பட்டு அதற்கான சில்லறை காசுகள் அளிக்கப்படும் என ஆர்பிஐ கவர்னர் அறிவித்தார்.
ரெப்போ விகிதம்
ஆர்பிஐ கவர்னர் இரு மாத நாணய கொள்கை முடிவுகளை வெளியிட்ட நிலையில், அடுத்த இரு மாதத்திற்கு ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் உயர்ந்து 6.50 சதவீதமாக இருக்கும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
கடனுக்கான வட்டி விகிதம்
இந்த உயர்வின் மூலம் வங்கிகள் தங்களது கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்தது. ஆர்பிஐ கடந்த நாணய கொள்கை கூட்டத்தில் வீட்டுக் கடன், பர்சனல் லோன், கார் லோன், பைக் லோன், கார்ப்பரேட் லோன், ஸ்டார்ட்அப் கடன், தங்கக் கடன் வரையில் அனைத்திற்கும் வட்டி அதிகரிக்கும். வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியதன் மூலம் கட்டாயம் கடன் வாங்கியோரின் ஈஎம்ஐ தொகை அதிகரிக்கும்.
6 முறை வட்டி உயர்வு
மே 2022ல் இருந்து 6 முறை வட்டியை உயர்த்தியது ஆர்பிஐ , இந்த
நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்த 6 பேரில் 4 பேர் ஒப்புதல் அளித்துள்ளனர். மேலும் இக்கூட்டத்தில் SDF விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக உயர்வு, MSF விகிதம் 6.75 சதவீதமாக உயர்வு, ரியல் ஜிடிபி வளர்ச்சி 6.4 சதவீத உயரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications