ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா சமீபத்தில் நியமிக்கப்பட்ட கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவின் சிக்னேச்சருடன் கூடிய 50 ரூபாய் புதிய நோட்டுகளை வெளியிட உள்ளதாக அறிவித்திருக்கிறது. சஞ்சய் மல்ஹோத்ரா ரிசர்வ் பேங்க்கின் 26-வது கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்பு கவர்னராக இருந்த சக்திகாந்த தாஸுக்குப் பிறகு, டிசம்பர் 2024-ஆம் ஆண்டு ஆர்பிஐ-இன் புதிய கவர்னராக பொறுப்பேற்றார்.
இந்தியாவின் பணவியல் அமைப்பின் தொடர்ச்சியான போக்கை உறுதி செய்வதற்காக புதிய ரூபாய் நோட்டுகள் வடிவமைக்கப்படவுள்ளது. அப்படியானால் ஏற்கனவே வெளியிடப்பட்ட 50 ரூபாய் நோட்டுகள் செல்லாதா என்ற கேள்வி எழலாம். முன்னர் வெளியிடப்பட்ட அனைத்து 50 ரூபாய் நோட்டுகளும் சட்டபூர்வமாக செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.

புதிதாக அச்சிடப்பட்டுள்ள 50 ரூபாய் நோட்டுகளில் என்னென்ன மாற்றங்கள் வரவுள்ளன?: பாதுகாப்பை மேம்படுத்தவும், கள்ள நோட்டுகளை தடுக்கவும் அறிமுகப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி நியூ சீரிஸ்-இன் கீழ் புதிய 50 ரூபாய் நோட்டுகள் ஏற்கனவே உள்ள வடிவமைப்பிலேயே தொடர்ந்து அச்சிடப்பட உள்ளது. நோட்டின் முன்பக்கத்தில் மகாத்மா காந்தியின் உருவப்படமும், பின்புறத்தில் கலாச்சார கருத்துகளும் பொறிக்கப்பட்டிருக்கும்.
வேறு என்ன மாற்றங்கள்?: தற்போது புதிதாக பதவியேற்றுள்ள கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவின் புதுப்பிக்கப்பட்ட சிக்னேச்சர் மட்டுமே ஒரே மாற்றம். வேறு எந்த வடிவமைப்பு மாற்றங்களும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
பழைய ரூ.50 நோட்டுகள் செல்லுபடியாகுமா?: அனைத்து பழைய 50 ரூபாய் நோட்டுகளும் இன்னும் செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. ஆளுநர் மல்ஹோத்ராவின் கையொப்பத்துடன் கூடிய புதிய நோட்டுகள் வெளியிடப்பட்ட பிறகும், முந்தைய ஆளுநர்களால் கையொப்பமிடப்பட்ட பழையவை பயன்பாட்டில் இருக்கும். இது பொதுமக்களுக்கோ அல்லது வணிகங்களுக்கோ எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒரு சுமூகமான மாற்றத்தை உறுதி செய்கிறது.
ஏன் புதிய நோட்டுகள் வெளியிடப்படுகிறது?: ஒவ்வொரு முறையும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் கையொப்பதை மாற்றுவது ரிசர்வ் வங்கியின் பொதுவான நடைமுறையாகும். புதிய ஆளுநர் பதவியேற்கும் போது அவரின் கையொப்பமிட்ட புதிய நோட்டுகள் வெளியிடப்படும். அதே வேளையில் பழைய நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும். உதாரணமாக உர்ஜித் படேல் கையொப்பமிட்ட 50 ரூபாய் நோட்டுகள் முதன் முதலில் 2016-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன. அதேநேரம் Y.V. ரெட்டி போட்ட கையொப்பமிட்ட ரூபாய் நோட்டுகள் 2004.ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன. அதேபோல தான் தற்போது சஞ்சய் மல்ஹோத்ரா கையொப்பமிட்ட 50 ரூபாய் நோட்டுகளும் வெளியிடப்படவுள்ளன.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications