ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழு வெள்ளிக்கிழமை அதன் நிதி மேலாண்மை வாயிலாக கிடைத்த 87,416 கோடி ரூபாய் அளவிலான உபரி தொகையை டிவிடென்ட் ஆக மத்திய அரசுக்கு அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் ஆர்பிஐ தனது contingency risk buffer அளவீட்டை தற்போது இருக்கும் 5.5 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி 2022 ஆம் நிதியாண்டில் 30,307 கோடியை மத்திய அரசுக்கு உபரி நிதியாக கொடுத்தது குறிப்பிடத்தக்கது. சக்திகாந்த தாஸ் தலைமையிலான ஆர்பிஐ நிர்வாக குழு ஏப்ரல் 2022 - மார்ச் 2023 காலக்கட்டத்திற்கான ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்த பின்பு, 2022-23 ஆம் ஆண்டுக்கான ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கை மற்றும் கணக்குகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும் ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழு கூட்டத்தில் உலகளாவிய பொருளாதாரம் மற்றும் உள்நாட்டு பொருளாதார நிலைமை மற்றும் தற்போதைய geopolitical பிரச்சனைகள் இந்திய பொருளாதாரம் மீது எவ்விதமான பாதிப்பை கொண்டு உள்ளது என்பதை ஆலோசனை செய்தது.

இந்தியாவின் பென்ச்மார்க் 10 ஆண்டு பத்திர வருவாய் 5 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.05 சதவீதம் உயர்ந்து 7.01% ஆக இருந்தது. இந்த உயர்வுக்கு முக்கியமான காரணம் சந்தை முதலீட்டாளர்கள் சுமார் 1 - 1.5 லட்சம் கோடி ரூபாயை பத்திர சந்தையில் முதலீடு செய்துள்ளது தான்.
ஆர்பிஐ தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை அதிகரித்த காரணத்தால் இந்த வருடம் அதிகப்படியான உபரி நிதியை மத்திய அரசு பெறும் என கணிக்கப்பட்டது. இது மட்டும் அல்லாமல் ஆர்பிஐ ரூபாய் மதிப்பின் சரிவை கட்டுப்படுத்த அதிகப்படியான வெளிநாட்டு நாணய பரிமாற்றத்தில் ஈடுப்பட்டது, இதேபோல் உள்நாட்டு வங்கி அமைப்பில் அதிகப்படியான நிதி உட்செலுத்தப்பட்டது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications