இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்து, செப்டம்பர் 30,2023 க்குள் அவற்றை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
முக்கிய விபரங்கள்:
1) செப்டம்பர் 30,2023 க்குள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக்கொள்ள வேண்டும்.
2) மே 23, 2023 முதல் ஒரு முறைக்கு அதிகப்படியாக 20,000 ரூபாய் வரையில் ஒருவர் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள முடியும்.
3) அனைத்து வங்கிகளும் 2000 ரூபாய் நோட்டுக்களை மக்கள் மத்தியில் புழக்கத்தில் விட வேண்டாம் என ஆர்பிஐ அறிவுறுத்தப்பட்டு உள்ளதால், வங்கியில் இருந்து மக்கள் யாரும் 2000 ரூபாய் நோக்குகளை பெற வேண்டாம்.

4) மக்கள் இந்தியாவில் இருக்கும் எந்த வங்கியிலும் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் டெபாசிட் செய்யவோ அல்லது வேறு டினாமினேஷன் கொண்ட ரூபாய் நோட்டுகளில் மாற்றிக்கொள்ளலாம்
5) 2000 ரூபாய் மாற்றிக்கொள்ளும் பணியில் வங்கி பணிகள் பாதிக்க கூடாது என்பதறக்காக 20000 ரூபாய் லிமிட் செட் செய்யப்பட்டு உள்ளது
6) இந்த 2000 ரூபாய் லிமிட் என்பது வேறு ரூபாய் நோட்டுகளை மாற்று போது மட்டுமே, வங்கி கணக்கில் டெப்பாசிட் செய்யும் போது எவ்விதமான தடையும், கட்டுப்பாடு இல்லை
வெள்ளிக்கிழமை RBI வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்திய ரிசர்வ் வங்கியின் Clean Note Policy படி, புழக்கத்தில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள பொதுமக்களுக்கு போதுமான நேரத்தை வழங்க முடிவு செய்து அனைத்து வங்கிகளும் செப்டம்பர் 30, 2023 வரை 2000 ரூபாய் நோட்டுகளுக்கு டெபாசிட் அல்லது பணத்திற்கு இணையாக தொகையை மாற்றும் ரூபாய் நோட்டுகளை வழங்கும் வசதியை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டு உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு அனைத்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து பொருளாதாரத்தில் தேவையான நாணயத் புழக்கத்தை உருவாக்க RBI சட்டம், 1934 இன் பிரிவு 24(1) இன் கீழ் நவம்பர் 2016 இல் 2000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் நோக்கம் நிறைவேறியது, மற்றும் சந்தையில் போதுமான பிற மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்துள்ளது. அதனால், 2018-19ல் ₹2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது.

தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களில் 89 சதவீகம் மார்ச் 2017க்கு முன்பு வெளியிடப்பட்டவை, மேலும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் அதிகப்படியாக மார்ச் 31, 2018ல் 6.73 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. தற்போது 3.62 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
மேலும் இந்திய சந்தையில் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றாலும் எவ்விதமான பணபுழக்க பிரச்சனையும் இல்லாத நிலையில் தான் ஆர்பிஐ இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதனால் மக்கள் பணமதிப்புழப்பு காலக்கட்டத்தை போல் பதற வேண்டியது இல்லை.
மத்திய நிதியமைச்சகத்திடம் ஆர்பிஐ முன்வைத்த வருடாந்திர அறிக்கையின் படி மார்ச் 2017 இறுதியில் 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டின் மொத்த புழக்கம் 9.512 லட்சம் கோடி ரூபாய், 2022 மார்ச் இறுதியில் 27.057 லட்சம் கோடி ரூபாய்.
2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் அதிகப்படியாக மார்ச் 31, 2018 இருந்தது, மொத்த ரூபாய் நோட்டு புழக்கத்தில் சுமார் 37.3 சதவீதத்துடன் 6.73 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டு பணபுழக்கத்தில் இருந்தது.
தற்போது மொத்த ரூபாய் நோட்டு புழக்கத்தில் வெறும் 10.8 சதவீதுடன் 3.62 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டு பணபுழக்கத்தில் உள்ளது. இந்த சரிவுக்கு இணையாக 500 ரூபாய் நோட்டும் பிற ரூபாய் நோட்டுக்களும் புழக்கத்தில் வந்துள்ளது.
பல நாட்களாக ATM இயந்திரத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் வராதது குறித்தும், 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் கிடைக்காதது குறித்தும் கேள்வி எழுந்த நிலையில் ஆர்பிஐ 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30க்குள் மாற்றிக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications