இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட அறிவிப்பின் படி பிப்ரவரி 25ஆம் தேதி சிறப்பு வர்த்தகத்தின் கீழ் அரசு பத்திரங்களை ஓரே நேரத்தில் வாங்கவும், விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் ரிசர்வ் வங்கி குறித்த நாளில் ஓபன் மார்கெட் ஆப்ரேஷன்ஸ் என்ற சிறப்பு வர்த்தகத்தின் கீழ் சுமார் 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு பத்திரங்களை விற்பனை செய்ய உள்ளது.

நாட்டின் தற்போதைய பணப் புழக்க அளவீடுகள் மற்றும் நிதியியல் நிலையைக் கருத்தில் இந்தியாவின் முதலீட்டுச் சந்தை மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு ஓபன் மார்கெட் ஆப்ரேஷன்ஸ் கீழ் ஓரே நேரத்தில் 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு பத்திரங்களை வாங்கவும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன் அறிவிப்புக் காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டது. இந்தப் பாதிப்பில் சில நிதியியல் சந்தை கடுமையான நிதி நெருக்கடி, வர்த்தகப் பாதிப்பு, வருமானம் வளர்ச்சி ஆகியவை பாதிக்கப்பட்டு உள்ளது.
இதைச் சரி செய்யும் நோக்கில் தான் தற்போது ரிசர்வ் வங்கி 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு பத்திரங்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதே நேரத்தில் மத்திய அரசு 2021-22ஆம் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சிக்காகச் சுமார் 12.06 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை கடனாகப் பெற முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் மற்றும் முதலீட்டு ஈர்க்கும் திட்டங்கள் ஏப்ரல் மாதம் முதல் துவங்க உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications