இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் வேகமாக வளர்ந்து வருவது மூலம் யூபிஐ சேவை பெரும் வெற்றியை பதிவு செய்துள்ள காரணத்தால் மத்திய அரசு வல்லரசு நாடுகளை போல் இந்தியாவும் டிஜிட்டல் கரன்சிகளை உருவாக்கி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் இதுவரையில் 130 கோடி ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் ரூபாய் பயன்பாட்டில் உள்ளது.
இந்த நிலையில் இந்திய டிஜிட்டல் ரூபாயை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமையன்று, டிஜிட்டல் ரூபாயை எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளில் பயன்பட்டுத்த UAE ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-இன் மத்திய வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் டிஜிட்டல் ரூபாய் மட்டும் அல்லாமல் இந்தியாவின் பிற பின்டெக் சேவைகளையும் அந்நாட்டில் பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தியா UAE மத்தியிலான வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
இந்தியா - UAE
இந்தியா - UAE மத்தியிலான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இரு நாட்டு மத்திய வங்கிகளும் ஃபின்டெக் துறையில் பல்வேறு வளர்ந்து வரும் பகுதிகளில் ஒத்துழைக்க உள்ளது. குறிப்பாக மத்திய வங்கிகளான CBUAE மற்றும் RBI ஆகியவை இரு நாட்டின் டிஜிட்டல் நாணய பரிமாற்றம் குறித்து ஆராய உள்ளது.
திட்டம்
CBDC வாயிலாக எல்லை தாண்டிய பரிவர்த்தனையில் பணம் அனுப்புதல் மற்றும் வர்த்தகம் செய்வதற்கு வசதியை ஏற்படுத்த இருநாட்டு மத்திய வங்கிகளும் இணைந்து proof-of-concept மற்றும் pilot திட்டங்களை கையில் எடுக்க உள்ளது.
எல்லை தாண்டிய பரிமாற்றம்
CBDC மூலம் எல்லை தாண்டிய பயன்பாட்டை சோதனை செய்து வெற்றிக் கண்டால் பெரிய அளவிலான செலவுகளைக் குறைக்கும், எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளின் செயல்திறனை அதிகரிக்கும் மற்றும் இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கும் இடையிலான பொருளாதார உறவுகள் பெரிய அளவில் மேம்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி 2022 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து ஹோல்சேல் மற்றும் ரீடைல் பிரிவில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
130 கோடி ரூபாய்
பிப்ரவரி 28 ஆம் தேதி வரையிலான காலத்திற்கு சுமார் 130 கோடி ரூபாய் மதிப்புள்ள டிஜிட்டல் ரூபாய் அல்லது இ-ரூபாய் சோதனை அடிப்படையில் புழக்கத்தில் உள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தார். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நவம்பர் 1, 2022 அன்று மொத்த விற்பனைப் பிரிவில் டிஜிட்டல் ரூபாயிலும், டிசம்பர் 1, 2022 அன்று சில்லறை விற்பனைப் பிரிவிலும் பைலட்களை அறிமுகப்படுத்தியது.


Click it and Unblock the Notifications