இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை உத்தர பிரதேச மாநிலத்தை தலைமையிடமாக கொண்ட யுனைடெட் இந்தியா கோ-ஆப்ரேடிவ் வங்கியின் உரிமத்தை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி நாட்டில் இருக்கும் கூட்டுறவு வங்கிகளின் நிதிநிலையை ஆய்வு செய்து வரும் வேளையில் அடுத்தடுத்து பல வங்கிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டு வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிஜ்னோர் (Bijnor) சேர்ந்த யுனைடெட் இந்தியா கூட்டுறவு வங்கியில் போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் ஆர்பிஐ இந்த முடிவை எடுத்துள்ளது. இவ்வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டதால் வங்கி இனி எவ்விதமான வணிகத்தையும் மேற்கொள்ள முடியாது. ஆர்பிஐ இந்த முக்கியமான அறிவிப்பை புதன்கிழமை மாலை வர்த்தகம் முடியும் நேரத்தில் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

யுனைடெட் இந்தியா கோ-ஆப்ரேடிவ் வங்கி மூடப்படும் நிலையில் இவ்வங்கியின் ஒவ்வொரு டெபாசிட்தாரர்களுக்கும் வழக்கம் போல் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் (DICGC) அமைப்பிடம் இருந்து அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரையிலான டெபாசிட் தொகைக்கு காப்பீடு கிடைக்கும்.
இதன் மூலம் இவ்வங்கியில் டெபாசிட் செய்த 99.98 சதவீத வாடிக்கையாளர்களுக்கு தங்களுடைய முழு டெபாசிட் தொகையையும் DICGC அமைப்பிடம் இருந்து இன்சூரன்ஸ் பாதுகாப்பு வாயிலாக பெற்றுள்ளனர் என்றும் ஆர்பிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் ஆர்பிஐ யுனைடெட் இந்தியா கூட்டுறவு வங்கியில் போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் வங்கி உரிமத்தை ரத்து செய்ததாக கூறியதோடு, தற்போதைய நிதி நிலையில் இவ்வங்கி அதன் டெபாசிட்தாரர்களுக்கு முழுமையாக பணம் செலுத்த முடியாத நிலையில் தான் உள்ளது என்று ரிசர்வ் வங்கி கூறியது.
மேலும் இவ்வங்கி தொடர்ந்து இயங்குவதன் மூலம் டெபாசிட் வாடிக்கையாளர் நலன் பாதிப்பு ஏற்பட்டு தீங்கு விளைவிக்கும் என ஆர்பிஐ தனது அறிக்கையில் விளக்கம் கொடுத்துள்ளது. இவ்வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டதால், இவ்வங்கி வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வது மற்றும் திருப்பிச் செலுத்துவது உட்பட அனைத்து வங்கி சேவைக்கும் தடை விதித்துள்ளது.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!



Click it and Unblock the Notifications