இந்திய ரிசர்வ் வங்கி இன்ரு நடந்த நாணய கொள்கை கூட்டத்தில் 3வது முறையாக ரெப்போ விகித்தத்தில் வட்டி விகிதத்தை மாற்றாமல் இருப்பது குட்நியூஸ் ஆக இருக்கும் வேளையில், ஆர்பிஐ வீட்டுக்கடன் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்.
வீட்டுக் கடன் பிரிவில் வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கும் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது ஆர்பிஐ. அதாவது வங்கிககள் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதங்கள் மற்றும் ஈஎம்ஐ-களை வெளிப்புற அளவுகோல் (external benchmark) அடிப்படையில் வீட்டுக் கடன்களுக்கான மிதக்கும் வட்டிவிகித மாற்றியமைக்கும் போது வாடிக்கையாளர்களுக்கும் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது

மேலும், வங்கிகள் தங்களின் ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்வதில் தெளிவான கட்டமைப்பை வங்கி ஒழுங்குமுறை ஆணையம் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதனுடன், ரிசர்வ் வங்கி, ஈபிஎல்ஆர் எனப்படும் external benchmark lending rate அமைப்பின் கீழ் கடன் வாங்குபவர்களுக்கு அவர்களின் விருப்பப்படி பிக்சட் வட்டி விகித (Fixed Rate) முறைக்கு மாறுவதற்கான வாய்ப்பை வழங்குமாறு வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்கள், வீட்டுக்கடன் நிறுவனங்களுக்கு ஆர்பிஐ உத்தரவிட்டு உள்ளது.
இதற்காக ரிசர்வ் வங்கி கடன் வாங்கியவர்கள் ப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் இருந்து நிலையான வட்டி விகித (Fixed Rate) முறைக்கு மாற்றுவும் அல்லது எளிதாக முன்கூட்டியே கடனை முடிப்பதற்கான கட்டமைப்பு அதாவது Framework அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் கீழ் யாரேனும் வீட்டுக்கடன் பெற்று இருந்தால் Fixed Rate வட்டி விகிதத்திற்கு மாற முடியும்.
இதற்காக Framework அறிமுகம் செய்ய ஆர்பிஐ வங்கிகள், மக்கள், வர்த்தக சந்தை என பல பிரிவுகளில் ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. ப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் இருந்து நிலையான வட்டி விகித (Fixed Rate) முறைக்கு மாற்றும் வாய்ப்பு வீட்டுக்கடனுக்கு மட்டும் அல்லாமல் வாகன கடனுக்கும் அளிக்கப்படும் என கூறப்படுகிறது. இதுக்குறித்த முழுமையான விளக்கம் மற்றும் ஃப்ரேம்வொர்க் விரைவில் ஆர்பிஐ வெளியிடும்.
இந்தியாவில் கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் அதிகமாக இருக்கும் வேளையில் ப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் இருந்து நிலையான வட்டி விகித (Fixed Rate) முறைக்கு மாற்றும் வசதியும், foreclosure வசதியும் கடன் வாங்கியவர்களுக்கு பெரிய அளவில் பலன் அளிக்கும். மேலும் ஆர்பிஐ இந்த ஃப்ரேம்வொர்க் கொண்டு வர முக்கிய காரணம் ப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் கடன் வாங்கியவர்களுக்கு வங்கிகள் வெளிப்படையாக அவர்களுடைய வட்டி விகித மாற்றம் ஈஎம்ஐ கணக்கீட்டையும் தெரிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications