இந்திய சந்தையை சர்வதேச பொருளாதார மந்தநிலை, விலைவாசி உயர்வு, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 82 ரூபாய்க்கு அதிகமாகவே இருப்பதற்கு மத்தியில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்க OPEC நாடுகள் முடிவு என பல காரணிகள் பாதித்து வருகிறது.
இதனால் இந்தியாவின் பணவீக்கம் தொடர்ந்து அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் வேளையிலும் ஆர்பிஐ இன்றைய நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் ரெப்போ விகிதத்தை உயர்த்தாமல் தொடர்ந்து 6.50 சதவீதம் வரையிலேயே தொடரும் என அறிவித்துள்ளது.

ஆனால் ஆர்பிஐ பணவீக்கத்தை குறைக்க போதுமான நடவடிக்கையை நாணய கொள்கை வாயிலாக எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேவேளையில் ஆர்பிஐ பணவீக்கம் குறைக்காமல் இருக்க முக்கிய காரணம் ரஷ்யாவின் தள்ளுபடி கச்சா எண்ணெய்யும், சமீபத்தில் ரஷ்யாவின் ராஸ்நெப்ட் மற்றும் இந்தியாவின் இந்தியன் ஆயில் நிறுவனம் துபாய் விலையை பென்ச்மார்க் ஆக வைத்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்தது.
இது கச்சா எண்ணெய் விலை உயர்வு மூலம் ஏற்படும் பணவீக்க உயர்வு கணிசமாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியிருந்தாலும் இன்று ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்காதது மூலம் வீட்டுக் கடன், பர்சனல் லோன், கார் லோன், பைக் லோன், கார்ப்ரேட் லோன், ஸ்டார்ட்அப் கடன், தங்கக் கடன் மீதான வட்டி விகிதம் உயராது.
இதேபோல் வங்கிகள் ஏற்கனவே ரெப்போ விகித உயர்வுக்கு முழுமையான வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் வங்கிகள் தனது கடன் வர்த்தகத்தின் மூலம் அதிகப்படியான வட்டி வருமானத்தை பெற உள்ளது. இதேவேளையில் ஆர்பிஐ கர்வனர் நாட்டின் பணவீக்கத்தை குறைப்பதை முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என அறிவிக்கப்பட்டதோடு, வட்டி விகிதம் உயர்வு குறித்த நடவடிக்கை எப்போது வேண்டுமானாலும் எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துள்ளார் சக்திகாந்த தாஸ்.

இதனால் அடுத்த மாதம் முதல் opec நாடுகளின் கச்சா எண்ணெய் உற்பத்தி மூலம் பணவீக்கம் அதிகரித்தால் கட்டாயம் ஆர்பிஐ தலையீட்டின் மூலம் ரெப்போ விகிதத்தை உயர்த்தும். இதோடு இந்தியாவில் பணவீக்கம் உயர கச்சா எண்ணெய் மட்டும் காரணம் இல்லை, இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி, விவசாய உற்பத்தி ஆகியவையும் அடக்கம்.
இந்தியாவில் தற்போது உணவு பணவீக்கம் முக்கிய பிரச்சனையாக இருக்கும் வேளையில் இதன் உற்பத்தி மற்றும் விலை அளவும் ரெப்போ விகிதத்தை உயர்த்துவதிலும், குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. 2024 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பணவீக்கம் 5.2 சதவீதமாக இருக்கும் எனவும், 2024 ஆம் நிதியாண்டில் நாட்டின் ரியல் ஜிடிபி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளதாக ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications