இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு-வின் 2 நாள் கூட்டம் இன்று முடியும் வேளையில் வட்டி விகித குறைப்பை நீண்ட காலத்திற்குத் தள்ளி வைக்கக் கூடும் என்றும், அமெரிக்க மத்திய வங்கி (Fed) வட்டி விகிதக் குறைப்பு தொடங்கிய பிறகு, அக்டோபர் மாதத்தில் வட்டி விகிதங்களைக் குறைக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
ஐரோப்பிய மத்திய வங்கியும், கனடா மத்திய வங்கியும் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி குறைப்பிற்கு முன்பே தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளனர். இதனால் ஆர்பிஐ இக்கூட்டத்தில் சர்ப்ரைஸ் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேவேளையில் இந்தியாவில் பணவீக்கம், புதிய அரசு, ஆகியவை முக்கிய தடைகளாக உள்ளது.

இந்தியாவின் நிதி கொள்கை முடிவுகள் உள்நாட்டுப் பொருளாதார நிலவரத்தைப் பொறுத்தே இருக்கும் என்றும், அமெரிக்க மத்திய வங்கியின் முடிவுகள் பெரிதாகப் பாதிப்படையாது என்றும் ரிசர்வ் வங்கி தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இதனால் ஐரோப்பிய மத்திய வங்கி, கனடா மத்திய வங்கி வழியில் ஆர்பிஐ தனது வட்டி விகிதத்தைக் குறைக்கவும் வாய்ப்பு உள்ளது.
இப்படி சந்தையில் ரெப்போ விகிதம் குறைப்பு தொடர்பாக 50:50 மனநிலையில் இருக்கும் வேளையில், YES Bank நிபுணர்கள் தங்கள் அறிக்கையில், இந்த வட்டி விகித குறைப்பில் இந்திய ரிசர்வ் வங்கி, அமெரிக்க மத்திய வங்கியை விட முன்னதாக குறைக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர்.
பிற முக்கிய பொருளாதாரங்களுடன் ஒப்பிடும்போது, அமெரிக்காவின் பொருளாதாரம் மிகவும் வலுவாக இருப்பதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. செப்டம்பர் மாதத்தில் அமெரிக்க மத்திய வங்கி முதன் முதலாக வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (0.25%) குறைக்க வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஆர்பிஐ அக்டோபர் கூட்டத்தில் ஆர்பிஐ தனது வட்டி விகிதத்தைக் குறைக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இப்படி அதிகப்படியான நிலையற்ற தன்மைகள் நிறைந்துள்ள சூழ்நிலையில் CME Fed watch tool தகவலின் படி, அமெரிக்க மத்திய வங்கி செப்டம்பர் மாதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் குறைக்கப்படுவதற்கான வாய்ப்பு 52.6% என்றும், வட்டி விகிதம் குறைக்கப்படாமல் இருப்பதற்கான வாய்ப்பு 38.4% என்றும் தெரிவிக்கிறது. இது ரெப்போ விகித குறைப்பிற்குக் கூடுதல் பிரச்சனையாக உள்ளது.
எனவே, ரிசர்வ் வங்கி முதன் முதலாக வட்டி விகிதத்தை எப்போது குறைக்கும் என்பது கடினமான கேள்வி. செப்டம்பர் மாதத்தில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கக்கூடும் என்ற நிலையில், அக்டோபர் மாதத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கத் தொடங்கலாம் என்று நாங்கள் கணிக்கிறோம் என யெஸ் வங்கி வல்லுனர்கள் கூறுகின்றனர்.
வட்டி விகிதக் குறைப்பு எந்த மாதத்தில் தொடங்கினாலும், 2025ஆம் நிதியாண்டில் மொத்தமாக 50 அடிப்படை புள்ளிகள் வரையில் மட்டுமே வட்டி விகிதம் குறைக்கப்படும் யெஸ் வங்கி ஆய்வாளர்களின் ஆய்வறிக்கை குறிப்புகள் தெரிவிக்கிறது.
பணவீக்கம் குறைந்து வந்தாலும், பணவீக்கத்தை 4% என்ற நிலைக்குத் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும் என்ற இலக்கை ரிசர்வ் வங்கி தொடர்ந்து பராமரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதான் இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு-வின் 2 நாள் கூட்டத்தின் முக்கிய இலக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications