இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று 2024 ஆம் நிதியாண்டுக்கான கடைசி இரு மாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை வெளியிட உள்ளார். பணவீக்கம், பட்ஜெட் அறிவிப்புக்குப் பின்பு பென்ச்மார்க் வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டாலும் சந்தையின் கணிப்பு வித்தியாசமாக உள்ளது.
இந்தக் கூட்டத்திலும் ஆர்பிஐ தனது வட்டி விகித முடிவில் ஒரு நிலையான போக்கைக் கடைப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாக உயர்த்தியது, அதன் பின்பு 5 கூட்டத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் ரெப்போ விகிதத்தை மாற்றி அறிவித்துள்ளது.

இந்த 6.5 சதவீத வட்டி விகிதத்தைப் பிப்ரவரி 2023 இல், உலகளாவிய பொருளாதார இயக்கம் மற்றும் நாட்டின் பணவீக்கக் கவலைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரையில் இந்தியாவின் பெஞ்ச்மார்க் விகிதம் 6.25 சதவீதமாகவே உள்ளது.
இன்றைய கூட்டத்தின் முடிவிலும் பென்ச்மார்க் வட்டி விகிதம் மாறவில்லை எனில் 6வது முறையாக ஆர்பிஐ தனது நிலைப்பாட்டை மாற்றாமல் வைத்துள்ளது என்பது உறுதி செய்யப்படும்.
நடப்பு நிதியாண்டில் இந்த மக்களை நேரடியாகப் பாதிக்கும் ரீடைல் பணவீக்கம் பெரும்பாலான காலகட்டத்தில் மிதமான அளவு இருந்தபோதிலும், ஜூலை 2023 இல் 7.44 சதவீதம் என்ற உச்சநிலையை அடைந்தது. டிசம்பர் 2023ல் ரீடைல் பணவீக்கம் 5.69 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று ஆர்பிஐ நாட்டின் ஜனவரி மாத பணவீக்க தரவுகளையும், நடப்பு நிதியாண்டு, அடுத்த நிதியாண்டுக்கான கணிக்கப்பட்ட அளவுகளையும் வெளியிடும். இந்தியா பொருளாதாரத்திற்கு ஏதுவான பணவீக்க வரம்பாக ரிசர்வ் வங்கி 4-6 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் பணவீக்கம் 6 சதவீதத்திற்குள் இருக்க வேண்டியது கட்டாயம், இதற்கான பணிகளைத் தான் ஆர்பிஐ பணப்புழக்கத்தின் வாயிலாகக் கட்டுப்படுத்துகிறது. நாட்டின் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் முக்கியமான ஆயுதம் ரெப்போ விகிதம்.


Click it and Unblock the Notifications