தேர்வே இல்லாமல் மாசம் ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை!! எப்படி விண்ணப்பிக்கலாம்?

நாட்டின் நிதி தலையெழுத்தையே மாற்ற கூடிய ஒரு அமைப்பு தான் ரிசர்வ் வங்கி. இங்கே இளம் நிபுணர்களுக்கான (Young Professionals) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலையில் சேர்பவர்களுக்கு மாசம் 1.5 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர உதவித்தொகையுடன் கூடிய இளம் தொழில்நிபுணர் பணிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெற்று பணி வாய்ப்பு பெறுவோருக்கு மாதம் ரூ.1.5 லட்சம் Stipend வழங்கப்படும். இது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான முழுநேரப் பணியாகும். ஆரம்பத்தில் 3 ஆண்டுகள் ஒப்பந்தம் இருக்கும். தேவைப்பட்டால் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம். தேர்வு செய்யப்படும் அனைவரும் மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கியின் தலைமை அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

தேர்வே இல்லாமல் மாசம் ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை!! எப்படி விண்ணப்பிக்கலாம்?

விண்ணப்பதாரர்கள் 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். முதுகலை (Postgraduate), இன்ஜினியரிங் (B.E/B.Tech) அல்லது பிஹெச்டி (PhD) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பின்வரும் துறைகளில் தான் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்:

1. Artificial Intelligence (AI) & Quantum Technology (செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் தொழில்நுட்பம்)

2. Cyber Security & IT Risk (சைபர் பாதுகாப்பு)

3. Data Analysis / Analytics (தரவு பகுப்பாய்வு)

4. Climate Change Risk & Sustainable Finance (பருவநிலை மாற்ற அபாய மேலாண்மை)

5. Financial Markets & Payment Systems (நிதிச் சந்தை மற்றும் பணப் பரிவர்த்தனை அமைப்புகள்)

Also Read

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய https://opportunities.rbi.org.in/scripts/bs_viewcontent.aspx?Id=5079 இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோட் செய்து, அதை முழுமையாக நிரப்பிக் கொள்ளவும். நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் சேர்த்து கீழே உள்ள ஆவணங்களை PDF வடிவில் ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும்:

உங்களுடைய தற்போதைய சுயவிவரக் குறிப்பு (Resume)

கல்விச் சான்றிதழ்கள் (Degree/Educational Certificates)

Statement of Interest (இந்த வேலைக்கு நீங்கள் ஏன் சேர விரும்புகிறீர்கள் என்ற விவரம்)

கல்வி அல்லது கொள்கை சார்ந்த உங்களின் எழுத்து ( Sample of academic or policy writing)

உங்களை நன்கு தெரிந்த பேராசிரியர்கள் அல்லது முந்தைய மேலாளரிடம் பெற்ற பரிந்துரைக் கடிதம் (Recommendation Letter)

தயார் செய்த அனைத்து ஆவணங்களையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Recommended For You

நீங்கள் அனுப்பிய விண்ணப்பங்கள் முதலில் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள். அதன் பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் நடைபெறும். நேர்காணலுக்கான அழைப்பு கடிதம் மின்னஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்பப்படும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய இறுதி நாள் ஜூலை 6 ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+